என் மலர்
நீங்கள் தேடியது "murder"
- 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது70). விவசாயி. இவரது மனைவி தெரசாள் (65). இவர்களுக்கு சகாயராணி, விக்டோரியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சகாயராணிக்கு திருமணம் ஆகவில்லை. இளைய மகள் விக்டோரியாவிற்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் லூர்துசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். மேலும், மகள் சகாயராணி வேலைக்கு சென்று இவர்களை பராமரித்து வந்தார். லூர்துசாமி மனைவி தெரசாள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மகள் சகாயராணி தாயாருடன் தங்கி அவரை கவனித்து வருகிறார்.
இதனால் தனிமையில் இருந்த லூர்துசாமியை கவனித்துக்கொள்ள அவரது மனைவி தெரசாளின் தங்கை எலிசபெத் (60) என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒன்னல்வாடிக்கு வந்து அங்கேயே தங்கி அவரை கவனித்து வந்தார்.
நேற்று மாலை, லூர்துசாமி, கொழுந்தியாள் எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் லூர்துசாமி, எலிசபெத் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
தொடர்ந்து மர்ம கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. வீட்டில் புகை வந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு லூர்துசாமி, எலிசபெத் ஆகியோர் கொலை செய்யப்பட்டு தீயில் கருகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எலிசபெத் காதில் அணிந்து இருந்த தோடு, கழுத்தில் அணிந்து இருந்த நகை திருட்டு போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த மர்மகும்பலை பிடிக்க ஓசூர் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.
- 1981-ஆம் ஆண்டு கொள்ளைக் கும்பல் 24 பேரை சுட்டுக்கொன்றது.
- இது தொடர்பாக பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
உத்தர பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலால் ஒரு கிராமத்தில் 24 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 44 வருடங்கள் கழித்து 3 பேர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி மாவட்டத்தில் ஜேஸ்ரானா காவல் நிலையத்திற்கு உள்பட்ட திஹுலி கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சந்தோஷா என அழைக்கப்படும் சந்தோஷ் சிங், ராதே என அழைக்கப்படும் ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் கொள்ளை கும்பம் நுழைந்தது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தினரைச் சேர்ந்த 24 பேரை ஈவு இரக்கமின்றி கொள்ளைக் கும்பல் சுட்டுக்கொன்றது. இதில் பெண்கள் குழந்தைகளும் அடங்குவர். சட்டுக்கொன்றதுடன் அவருர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.
இது தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981-ம் அணடு நவம்பர் மாத் 19-ந்தேதி புகார அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 17 குற்றவாளிகளில் 13 பேர் மரணமடைந்தனர். இதில் சந்தோஷ் மற்றும் ராதே ஆகியோரும் அடங்குவர்.
மீதமுள்ள 4 பேர் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் வழக்கை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் கப்தான் சிங், ராம் சேவக், ராம் பால் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மார்ச் 18-ந்தேதி தண்டனை வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் வாஜ்பாய், துக்கமடைந்த குடும்பங்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டார்.
- அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே பிரேம் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- கலெக்டர் உத்தரவுபடி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளியக்ரஹா ரம் சின்னத்தெருவை சேர்ந்தவர் பிரேம் (வயது 30). நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த மாதம் அம்மன்பேட்டை பைபாஸ் சாலை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்ப ட்டார்.
இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மனக்கரம்பையை சேர்ந்த விஸ்வ பிரசாத், பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சிலரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்களில் மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மணிகண்டன், விஸ்வபிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த உத்தரவு நகல்களை திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
- புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
- மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு சின்னராசுவின் மனைவி கலைச்செல்வி நோய் வாய்ப்பட்டு இறந்தார்.
இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த புல்லட் ராஜா என்கிற நளராஜா (41) என்பவரின் மனைவி கிருஷ்ணவேனியுடன் சின்னராசுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நளராஜா கடந்த ஜனவரி மாதம் காந்தி நகரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சதீஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இவர் ஜெயிலில் இருந்ததால் சின்னராசுவும், கிருஷ்ணவேணியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற தைரியத்தில் கள்ளக்காதல் ஜோடி கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் புல்லட் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் மனைவிக்கும் சின்னராசுவுக்கும் இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்தார்.
இருந்தபோதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சின்னராசு, கிருஷ்ணவேணியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதை அடுத்து புல்லட் ராஜாவும் அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த காயம் அடைந்த சின்னராசு துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய புல்லட் ராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகாமையில் வைத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புல்லட் ராஜா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் ஜெயிலில் இருக்கும்போதே என் மனைவியுடன் சின்னராசு கள்ளத்தொடர்பு வைத்திருந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜாமினில் வந்த பின்னர் இருவரையும் கண்டித்து பார்த்தேன். ஆனால் என்னை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
இது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் கோவில் அருகாமையில் வைத்தும் அவர்களை கண்டித்தேன். அப்போதும் சின்னராசு என் பேச்சைக் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை குத்தி கொலை செய்தேன் எனக் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள புல்லட் ராஜாவை இன்று மாலைக்குள் திருச்சி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர்பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார்.
- போலீசார் இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்ததினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23).
இவரது சொந்த ஊர் தமிழக- கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங்கரை ஆகும். அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார்.
கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார்.
சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.
அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாறசாலை போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது. அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பானத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர்பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார்.
இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக - கேரள எல்லையில் கல்லூரி மாணவன் ஷரோன் ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் காதலியே விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக காதலி கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார்.
- கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள கீழ ஆம்பூர் ஊராட்சி மன்றம் பின்புறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் கொலை செய்ய ப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபர் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரை பார்த்த போலீசார் புகைப்படம் எடுத்ததோடு, அவரை மதுரைக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மீண்டும் கடையத்திற்கு வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தற்போது வரை அவர் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்பது தெரிய வில்லை. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்தை அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- திருச்சி அருகே உள்ள கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பட்டு (வயது 64).
- பட்டுவிற்கும் அவரது உறவினர் வனிதாவுக்கு சொத்து தகராறு இருந்து வந்தது.
திருச்சி
திருச்சி அருகே உள்ள கடியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பட்டு (வயது 64). இவரின் குடும்பத்தினருக்கும் உறவினரான, ஊர் காவல் படையைச் சேர்ந்த வனிதா (38) என்பவரின் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
மேலும் வனிதா, பட்டுவிடம். ரூ. 50,000 கடன் வாங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை திருப்பி கேட்க பட்டு சென்ற போது குடும்ப தகராறு எழுந்துள்ளது.
இதில் ஊர் காவல் படையைச் சேர்ந்த வனிதா அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மற்றும் ராஜா என்பவரின்மனைவி குணம் ஆகியோர் பட்டுவை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த மூதாட்டி பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜீயபுரம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய ஊர் காவல் படையை சேர்ந்த வனிதா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.
- எங்கள் நிறுவனத்தில் வாங்கிய கடனை கொடுக்காததால் அவரை கொலை செய்யப்போகிறோம்.
- நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
அப்போது தஞ்சை மாவட்டம் குளிச்சப்பட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மனைவி கார்த்திகா (வயது 31 ). இவர் தனது 3 வயது பெண் குழந்தையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
எனது கணவர் விஜயராகவன் குடும்ப வறுமை காரணமாக மலேசியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ஆனால் பணி செய்த நாட்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த 5-ம் தேதி எனது மாமியாருக்கு அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு போன் வந்தது.
அதில் விஜயராகவன் எங்களது நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார்.
கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரை கொலை செய்யப் போகிறோம் என கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்தனர்.
மறுநாளும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜயராகவனை உயிரோடு விட வேண்டும் என்றால் ரூ.70 லட்சம் ரொக்க பணம் வேண்டும் எனக்கூறி மிரட்டினர். அந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து மிரட்டல் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.
மேலும் நாங்கள் வசிக்கும் இடத்தை அந்த நிறுவனத்தில் உள்ள ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டினர். இதனால் இந்த நிறுவனத்தில் உள்ள ஒருவர் எங்களிடம் இருந்து
ரூ. 5 லட்சம் வாங்கி சென்றார். எனது கணவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுகின்றனர் . நான் என் கை குழந்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.
இதனால் எந்த கணவரை அந்த நிறுவனத்திலிருந்து பத்திரமாக மீட்டு தர வேண்டும். இவ்வாறு கார்த்திகா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
- காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
- அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள கருமனூர் கூத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 60), விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (55). இவர்களது மகன் விஜய கிருஷ்ணராஜ் (32). இவர் ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த நந்தினி என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதை அடுத்து பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினிதா (27) என்பவரை விஜய் கிருஷ்ணராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் காக்காபாளையத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்த சக்திவேல், அதில் கிடைத்த பணத்தை வைத்து அவிநாசிபட்டியில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வந்தார். அங்கே வீடு கட்டி சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தங்கி இருந்தனர்.
இதற்கிடையே 2-வது மனைவி வினிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்த விஜய கிருஷ்ணராஜ், கல்லூரிக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். வினிதா தனது குழந்தைகளுடன் கருமனூரிலுள்ள வீட்டில் தங்கி இருந்தார். குடும்ப சண்டை குறித்து ஏற்கனவே திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினிதா புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து மகன், மருமகளை சமரசப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கிய சக்திவேல், கலைச்செல்வி தம்பதியினர் தீபாவளி பண்டிகையின்போது கருமானூர் சென்று வினிதாவிடம் பேசியுள்ளனர்.
இருவரையும் சேர்த்து வைக்க முயன்றும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சக்திவேல் கவலை அடைந்தார். மேலும் இருவரையும் அழைத்து பேசி மீண்டும் சேர்த்து வைக்கலாம் என மனைவி கலைச்செல்வியிடம் கூறினார். ஆனால் கலைச்செல்வி மறுத்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட மோதலில் கலைச்செல்வி விசைத்தறிக்கு பயன்படுத்தும் இரும்பு ராடால் கணவரை சராமாரியாக தாக்கினார். அதில் தலையின் பின்பகுதியில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த எலச்சிப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலைச்செல்வியை கைது செய்தனர். தொடர்ந்து சக்திவேலின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது கலைச்செல்வி போலீசாரிடம் கூறியதாவது, எனது மகனும் மருமகளும் பிரிந்து சென்ற நிலையில் எனது கணவர் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தார். இதில் எனக்கு விருப்பமில்லாததால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான் இரும்பு ராடால் அவரை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் கலைச்செல்வியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மருமகளை மாமனார், மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல்:
இரணியல் அருகே மணக்கரை அவரி விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 78). இவரது மகன் அய்யப்பன் கோபு (43) இவரது மனைவி துர்கா (38).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரரான அய்யப்பன்கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து துர்கா கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமனார் ஆறுமுகம் பிள்ளைக்கும், மருமகள் துர்காவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பிள்ளை அவரது மகன் மது (43) இருவரும் சேர்ந்து துர்காவை சரமாரியாக தாக்கினார்கள். கல்லாலும், கம்பாலும் தாக்கியதில் துர்கா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துர்காவின் சகோதரர் பகவத்சிங் இரணியல் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஆறுமுகம் பிள்ளை, அவரது மகன் மது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
எனது மகன் அய்யப்பன் கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு எல்லை பாதுகாப்பு படையிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த பணம் எனது மருமகள் துர்காவிடம் வந்து சேர்ந்தது. இந்த பணம் பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்றும் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது இன்னொரு மகன் மது அங்கு வந்தார். ஆத்திரமடைந்த நாங்கள் துர்காவை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.
போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருமகளை மாமனார், மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அபிஜீத் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
- அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், ‘செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்றும் கூறியிருக்கிறார்.
போபால் :
குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜீத் படிதார் என்ற வாலிபர், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார்.
எண்ணெய் மற்றும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அதில், 'துரோகம் செய்யக்கூடாது' என்று அபிஜீத் கூறுகிறார். பின்னர், படுக்கையில் கிடக்கும் ஒரு உருவத்தின் மீது மூடப்பட்ட போர்வையை விலக்கிக்காண்பிக்கிறார். அதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் தனது காதலியான அப்பெண், தன்னுடைய தொழில் பங்குதாரரான ஜிதேந்திரகுமார் என்பவருடனும் உறவு வைத்திருந்திருக்கிறார். அவரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஜிதேந்திரகுமார் சொன்னதன் பேரில்தான் நான் அவளை கொன்றேன் என்று கூறியிருக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், 'செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்' என்றும் கூறியிருக்கிறார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா (வயது 22). அவரும் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்ததாக கருதப்படும் அபிஜீத் தலைமறைவாகிவிட்டார். அவர் தான் கொலை செய்த காதலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்தான் முதலாவது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரை மடக்கிப்பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் மத்தியபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கொலையாளிகள் 9 பேரையும் இரவோடு இரவாக பிடித்து விட போலீசார் திட்டமிட்டனர்.
- இரட்டை கொலைக்கு பழி தீர்க்க கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள படப்பை அருகே மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வெங்கடேசன். மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மாடம்பாக்கம் ராகவேந்திரா நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவருடன் 3-வது வார்டு உறுப்பினர் சத்யாவும் சென்றார். அப்போது இவர்களை பின் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் 9 பேர் வந்தனர். ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் 3 பேர் அமர்ந்திருந்தனர். இவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே இறங்கி ஒரே நேரத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
வெங்கடேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினார்கள். 3 வெடிகுண்டுகளை வீசியதில் ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வார்டு உறுப்பினர் சத்யா ஆகியோர் நிலை குலைந்தனர்.
இதையடுத்து கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்புவதற்காக இருவரும் ஓட்டம் பிடித்தனர். அப்போது வெடிகுண்டு வீச்சில் ஈடுபட்ட 9 பேரும் வெங்கடேசனை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
அதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இதையடுத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
கொலையாளிகள் 9 பேரையும் இரவோடு இரவாக பிடித்து விட போலீசார் திட்டமிட்டனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டது. விடிய விடிய நடத்திய சோதனையில் கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரட்டை கொலைக்கு பழி தீர்க்க கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.