search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muslim Couple"

    • செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரெயிலிலேயே குழந்தை பிறந்தது.
    • ரெயில் கர்ஜத் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கோலாப்பூர்- மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரெயிலில் கடந்த 6-ந்தேதி 31 வயதான பாத்திமா என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது கணவர் தயாப்பும் பயணம் செய்தார்.

    ரெயில் லோனாவாலா ரெயில் நிலையத்தை கடந்த போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து செய்வதறியாது கணவர் தவித்துக்கொண்டிருந்த போது பாத்திமாவுக்கு ரெயிலிலேயே குழந்தை பிறந்தது.

    இதையடுத்து ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில் கர்ஜத் ரெயில் நிலையத்துக்கு வந்ததும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு தாயையும், குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.

    இந்த நிலையில், குழந்தை ரெயிலில் பிறந்ததால் ரெயிலுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ரெயிலில் பயணம் செய்த சக பயணிகள், மகாலட்சுமி கோவிலுக்கு செல்லும் போது குழந்தை பிறந்ததால் அந்த மகாலட்சுமியுடன் ஒப்பிட்டு கூறினர். இதனால் தனது மகளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட முடிவு செய்ததாக தயாப் தெரிவித்தார். இதையடுத்து அக்குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கோலாப்பூர்-மும்பை மகாலட்சுமி விரைவு ரெயிலில் பாத்திமா தனது மகளான மகாலட்சுமியைப் பெற்றெடுத்த சம்பவம், மத நல்லிணக்கம் மற்றும் மனித இரக்கத்தின் அழகை எடுத்துக்காட்டுகிறது.

    சுவிட்சர்லாந்தில் சகஜமாக கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்து விட்டது. #SwissCitizenship
    ஜெனீவா:

    சுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம் கணவன்-மனைவி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். அதை தொடர்ந்து அவர்களிடம் நகரின் துணைமேயர் பியாரே-அன்டோனி ஹில்ட்பிரான்ட் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

    அப்போது முஸ்லிம் தம்பதி அவர்களிடம் சகஜமாக கைகுலுக்க மறுத்துவிட்டனர். இஸ்லாம் சட்டப்படி ஒரு ஆண் சம்பந்தமில்லாமல் பெண்ணுடனும், ஒரு பெண் மற்ற ஆண்களுடனும் கை குலுக்க கூடாது என காரணம் கூறப்பட்டது.

    அதைதொடர்ந்து அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் முஸ்லிம் தம்பதிக்கு சுவிட்சர்லாந்து குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்து விட்டது.

    கைகுலுக்க மறுப்பு தெரிவித்ததால் குடியுரிமை மறுக்கப்படுவதாக மேயர் கிரிகோரி ஜூனாட் தெரிவித்தார்.

    கடந்த 2016-ம் ஆண்டில் சிரியாவை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் பள்ளி ஆசிரியைக்கு கைகுலுக்க மறுத்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். #SwissCitizenship
    ×