search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthamil vehicle"

    • அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அவர் எழுதிய புத்தகங்கள் கொண்ட பேனா வடிவிலான முத்தமிழ் ஊர்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்திற்கு வந்தது, இந்த ஊர்தியை ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. தேவராஜி, நகர தி.மு.க. செயலாளர் சாரதி குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அங்கு வந்த முத்தமிழ் ஊர்திக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர், இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    பின்னர் கருணாநிதி சிலைக்கு தி.மு.க.வினர் மற்றும் அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பேனா சின்னதுடன் வந்த வாகனத்தை பார்வையிட பள்ளி கல்லூரி மாணவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் என ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதில் வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன், ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், பேரூராட்சி தலைவர்கள் பூசாராணி (உதயேந்திரம்) தமிழரசி (ஆலங்காயம்), பேரூராட்சி செயலாளர்கள் செல்வராஜ் (உதயேந்திரம்) ஶ்ரீதர் (ஆலங்காயம்), தாசில்தார் மோகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×