search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthunagar Express Train"

    • பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
    • மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத ஒரு பொதுப்பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-சென்னை இடையே முத்துநகர் விரைவு ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.

    21 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஏற்கனவே 4 பொதுப்பெட்டிகள் இரு ந்தன. ஆனால் இடையில் 3 பெட்டிகளாக குறைக்கப்பட்டு, 3-ம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி எண்ணிக்கை 4ஆக அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பொதுப்பெட்டிகளில் பயணிகள் அமர்ந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் காணப்படுவதால், பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து முத்துநகர் விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மீண்டும் 4 ஆக அதிகரித்துள்ளது.

    மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத ஒரு பொதுப்பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி-சென்னை முத்துநகர் ரெயிலில் இந்த மாற்றம் வருகிற 20-ந்தேதியில் இருந்தும், சென்னை-முத்துநகர் ரெயிலில் வருகிற 21-ந்தேதியில் இருந்தும் நடைமுறைக்கு வரும். பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரெயில்வேயின் இந்த முடிவுக்கு பல்வேறு ரெயில் பயணிகள் நலச்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    ×