என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mystery man"
- மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த ஒருவர் திடரென கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தார்.
- 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.
தஞ்சாவூர்:
காரைக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.
இவரது மனைவி கண்ணம்மை (வயது 51).
இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலைபார்த்து வருகிறார்.
இதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் தங்கி உள்ளனர்.
இவரது மகன் அரவிந்த் (20) தஞ்சை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சுப்பிரமணியன் தனது மனைவி கண்ணம்மை, மகன் அரவிந்த் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்திருந்தார்.
நேற்று அரவிந்தை அவர் படிக்கும் கல்லூரியில் கொண்டு விடுவதற்காக காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சைக்கு குடும்பத்துடன் வந்தார்.
அப்போது மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை அறிந்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காரைக்குடிக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி 3 பேரும் சாப்பிட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த காரின் அருகில் வந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியப்படி வந்த மர்ம நபர் ஒருவர் திடரென கண்ணம்மையின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார்.
இதில் 3 பவுன் சங்கிலி மட்டும் அந்த மர்மநபரின் கையில் சிக்கியது.
இதில் அதிர்ச்சியடைந்த கண்ணம்மை மற்றும் குடும்பத்தினர் திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டனர்.
ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
இது குறித்து அவர் தமிழ்பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார்.
- பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). இவர் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து இளையாங்கன்னி செல்ல வேறு ஒரு பஸ்சில் ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மதுரை அருகே இளம்பெண்ணிடம் 6¾ பவுன் நகை திருடப்பட்டது
- இதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வடக்கு புதிய தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். மனைவி வித்யா(வயது33). இவர் நேற்று மாலை உறவினர் வீட்டு விஷேசத்திற்கு புறப்பட்டார். ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள தனியார் மகாலுக்கு அருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வித்யா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6¾ பவுன் தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- ஜெயராமன் வாரசந்தையில் விற்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே ஒட்டம் பட்டு என்ற ஊரை சேர்ந்த வர் ஜெயராமன் (வயது 60). விவசாயி. இவர் அதிகாலை யில் தனது ஆடுகளை செஞ்சியில் நடை பெற்ற வார சந்தையில் விற்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் செஞ்சி-விழுப் புரம் சாலை பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரே சென்றபோது அவரை வழி மறித்த ஒரு நபர் தான் போலீஸ் அதிகாரி என்றும், நீ கஞ்சா கடத்தி செல்கிறாய் உன்னை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவரை சோதனை செய்த நபர் அவர் வைத்திருந்த ஆடு விற்ற பணம் ரூ.43,300 எடுத்துக் கொண்டு தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டார். இது குறித்து அவர் செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் என்று கூறிய மர்ம நபரை வலை வீசி தேடிவரு கிறார்கள். போலீஸ் என்று கூறி விவசாயிடம் பணம் பறித்த சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மருத்துவ கல்லூரி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பாட்டம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அந்த பெண் கல்லூரி அருகேயுள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அந்த பெண்ணை மறித்து மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து மறைவான இடத்திற்கு அழைத்துச் ெசன்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. அதன் பின் அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி, திருமண மண்டபம் பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வரு கின்றனர்.
- நண்பரின் சகோதரர் என்று ஏமாற்றி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
- முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(24). சம்பவத்தன்று இவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முத்துக்குமாரின் நண்பரா ன ராஜா என்பவரின் தம்பி பேசுவதாக கூறியுள்ளார்.
அவரும், அவரது நண்பர்களும் அருகில் உள்ள விழா ஒன்றிர்க்கு வந்ததாகவும் அங்கே மது குடித்துவிட்டு கிணற்றில் குளித்தபோது நண்பர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறி உடன டியாக கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கோவில் அருகே வரும்படி அழைத்துள்ளார்.
முத்துகுமார் அவர் கூறிய இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு செல்போனில் பேசிய நபர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள அட்டைமில் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் வந்து முத்துக்குமாரை ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு முத்துகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர் கத்தியின் கீழ் பகுதியால் முத்துகுமாரை தாக்கியுள்ளார். இதையடுத்து முத்துகுமார் தனது வங்கி கணக்கு கடவுச்சொல்லை கூறியுள்ளார்.போன்பே மற்றும் ஜி-பே மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 200 எடுத்துள்ளனர்.
பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.அவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்துகுமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் இதுகுறித்து முத்துகுமார் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
- தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.
நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.
இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.
அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆற்று கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் பேட்டை பாசிகாரன் தெருவைச் சேர்ந்தவர் சம்மந்தம் (வயது 73). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அதனை நள்ளிரவு மர்மநபர்கள் தீவைத்து எரிந்து விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை எழுந்த சம்பந்தம் தனது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து போய் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் கும்பகோணம் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னிமாரியம்மன் கோவில் வீதியில் அரவிந்தன், ஜெகதீஸ், சசிகுமார், அபுதாகிர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று இரவு வீட்டு முன்பு தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலை யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். மோட்டார் சைக்கிள்கள் தீ பிடித்து எரிவதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் 4 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. இது குறித்து 4 பேரும் குன்னூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கண்ணமங்கலம்:
வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நேற்று இரவு 9.30 மணி அளவில் கணியம்பாடி மலை கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் பஸ்கள் மீது கற்களை வீசினர். இந்த தாக்குதல் மலை கணவாய் முதல் கொங்கராம்பட்டு பகுதி வரை சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது நடத்தப்பட்டது. இதில் ஒரு ஆம்னி பஸ் உள்பட 7 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
கல்வீசியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து ஆங்காங்கே பஸ்களை சாலையிலேயே டிரைவர்கள் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கண்ணமங்கலம், வேலூர் தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மர்ம நபர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து பயணம் செய்ய அச்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.
இதேபோல, கீழ்பள்ளிப்பட்டு அருகே புதுப்பேட்டை பகுதியிலும் ஒரு அரசு பஸ் கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்தனர். அந்த பஸ் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- 8 பஸ்களின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்துள்ளதாக தெரிகிறது. ஒரு பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் செங்கல்களை பஸ்கள் மீது வீசி கண்ணாடியை உடைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயமில்லை.
குடிபோதையில் பஸ்களின் கண்ணாடியை உடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனினும் இது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. 2 பேரையும் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்