search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mystery of death"

    • ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர்.
    • சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நாராயண நகர் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் (வயது 42), கூலி தொழிலாளி குடிப்பழக்கம் கொண்டவர். இவரது மனைவி ஹசினா (37), இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    சாதிக் வேலைக்கு சென்று விட்டு வரும்போது குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த ஹசினா குழந்தைகளுடன் வெளியே சென்று விட்டு சிறிது நேரத்தில் பிறகு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது சாதிக் துணியால் அவரது கழுத்தை நெறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ஹசினா, சாதிக்கை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சாதிக் அவரே கழுத்தை நெரித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது கழுத்தை நெறித்து கொன்றார்களா? இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பிரேத பரிசோதனை முழு அறிக்கை வந்தால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்ற விவரம் தெரியவரும்.

    • நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    ஆத்தூர் நரசிங்கபுரம் திட்டா நகரில் வசித்து வந்தவர் மணி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி (36). இவர்களுக்கு கோகுல்நாத் (20) என்ற மகனும், நிஷா (18) என்ற மகளும் உள்ளனர். கோகுல்நாத் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

    நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார். மணியின் மனைவி காந்திமதிக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார்.

    பின்னர் அவராக வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 17-ந் தேதி காந்திமதி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மணி தனது மகனிடம் அம்மாவை தேடி பார்த்து வருகிறேன் என கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    இந்த நிலையில் திட்டாநகர் பகுதியில் உள்ள ெரயில்வே கேட் அருகே மணி ெரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலே இறந்து கிடந்தார். இது குறித்து நேற்று காலை தண்டவாள பாதையில் வேலை பார்த்து வந்த ஊழியர் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மணி, ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ெரயிலில் அடிபட்டு இறந்து விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எனினும் மணி சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

    ×