என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Naam Tamilar"
சென்னை:
பிரபாகரனின் 67-வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்குன்றத்தில் தமிழர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது. இதில் சீமான் பங்கேற்று பேசியதாவது:-
“தலைவர் பிரபாகரனை இளம் தலைமுறையினர் எப்படி பார்க்க வேண்டும் என்றால், வெறும் தமிழீழ நாட்டிற்கான விடுதலைப்போரின் தலைவன் என்றோ, இல்லை தமிழ்தேச விடுதலைக்கான போராட்டத்தின் தலைவன் என்று மட்டுமோ பார்க்கக் கூடாது. அதுவும் அவருக்கான அளவுகோல் அல்ல. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு இருக்கின்ற தேசிய இனங்கள் அதன் விடுதலைக்காக போராடுமானால் அதற்கான முன்னத்தி ஏராக தலைவர் பிரபாகரனை பார்க்க வேண்டும்.
ஈழத்தில் போரின்போது கட்டுநாயக்கா ராணுவ விமான தளத்தை தகர்த்த நம் தலைவருக்கு, பொது விமான தளத்தில் குண்டு போட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை, காரணம் அவர் இறுதிவரை நம்பினார். எமது எதிரிகள் சிங்கள மக்கள் அல்ல. எங்களை அடித்து ஒழிக்கும் சிங்கள ராணுவம் தான் என்று. இப்படி அறத்தின் வழி நின்று போரிட்டவர் எம் தலைவர்.
அந்த நிலத்தில் தலைவருக்கு இருந்த சிக்கல் என்னவென்றால் நம் நிலத்தை அடிமைப்படுத்தி சிறைப்படுத்தி சிங்களவன் ஆயுதம் வைத்து நம் மக்களை அழித்தொழித்தான். ஆனால் இந்த நிலத்தில் நம்மிடத்தில் இருந்தே வாக்கினைப் பெற்று அரசியல் அதிகாரம் அடைந்து நம் உரிமைகளை எல்லாம் பறித்து நம்மை அடிமைப்படுத்துகிறார்கள். அந்த நிலத்தில் நம் தலைவர் தூக்க வேண்டியது துவக்காக இருந்தது. இந்த நிலத்தில் நாம் தூக்க வேண்டியது வாக்காக இருக்கிறது. ஆயுதம் மிச்சம் வைத்ததை வென்று முடிக்க வேண்டிய வரலாற்றுத்தேவை, பெரும் பணி நமக்கு கைகளில் அளிக்கப்பட்டுள்ளது.
சாய்சஸ் எனும் புத்தகத்தில் சிவசங்கர மேனன் எழுதியிருக்கிறார் ‘பிரபாகரன், பொட்டம்மான் போன்ற தலைவர்களைப் பாதுகாத்து ஏதாவது ஒரு அரசியல் தீர்வினை எட்ட முற்பட்டபோது அன்று டெல்லியில் உள்ள அரசியல் தலைமையும் தமிழ் நாட்டு தலைமையும் அதனை விரும்பவில்லை. பிரபாகரனின் இருப்பு தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்று நம்பினார்கள். அதனால் இந்த போரினை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்பினார்கள்’ என்று அவர் எழுதி இருக்கிறார். அதனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால் இவர்களுடைய அரசியல் வாழ்வை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று நினைக்கிறோம்“
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... சென்னையில் தண்ணீர் தேங்கிய 75 பகுதிகளில் இருந்து வெறியேற்றும் பணி தீவிரம்- மாநகராட்சி நடவடிக்கை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்