search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naam Tamizhar Katchi"

    • அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகம் களமாடி வருகிறது.
    • யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரைக் கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார்.

    விஜய் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்த சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சம்பத்குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன் வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வார்கள்.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுகளுக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்நிலை நிர்வாகிகளுக்கு பல பணிகள் உள்ள நிலையில் சீமானைப் போன்று பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.

    அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகம் களமாடி வருகிறது. யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரைக் கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார்.

    சீமான் தனது கருத்தை தனது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டு போக விரும்பவில்லை. அவரவர் கருத்து அவரவர் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்து விட்டுப் பணியைக் கவனிப்பதே அனைவருக்கும் நல்லது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாநாடு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
    • மே 18 இன எழுச்சி 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் மாநாடு

    நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது இன எழுச்சி மாநாடு வருகிற நாளை மறுநாள் (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.

    மே 18 இன எழுச்சி முதல் மாநாடு மதுரையில் நடைபெற்றது. 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. 13-வது மாநாடு தற்போது தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெறுகிறது.

    சீமான் ஆலோசனை

    இதில் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கட்சியினர், தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டு ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவக்குமார், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் இசை மதிவானன், மண்டல ஒருங்கி ணைப்பாளர்கள் தூத்துக்குடி ராஜசேகர், நெல்லை சத்யா, கன்னியாகுமரி பெல்வின்ஜோ, தென்காசி அருண்சங்கர் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

    மே 18 இன எழுச்சி மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×