search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nagai farmers protest"

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டியும், மத்திய அரசை கண்டித்தும் நாகை புதிய பஸ் நிலையம் அருகே காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை சுற்றி கொண்டு, ஒரு பக்கம் பிரதமர் மோடியும், மறுமுனையில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதானுமும் கயிரை இறுக்குவது போல் போராட்டம் நடத்தினர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்து மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ் நாடு முக்குலத்து புலிகள் அமைப்பினர் நாகை வேளாங்கண்ணி அருகே உள்ள காமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து கீழையூர் போலீசார் முக்குலத்து புலிகள் அமைப்பை சேர்ந்த 30 பேரை கைது செய்தனர்.
    ×