search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NAMMA URU SUPER"

    • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
    • சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்

    ஊட்டி:

    ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நம்ம ஊரு சூப்பா் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் அம்ரித் தொடங்கி வைத்தார். இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:-

    தமிழக அரசால் திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு அவரவா் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு கள் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து அவரவா்களுக்கு உரிய பொறுப்புகளை எடுத்துரைக்க வேண்டும். குப்பைகளைத் தரம் வாரியாகப் பிரித்து வெளியேற்றுவதில் உரிய விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும்.

    பொதுமக்கள் அனை வரும் திடக்கழிவு மேலா ண்மையின் முக்கிய த்துவம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொ ள்ளவும், சுற்றுச்சூழல் தூய்மையான கிராமங்களை அடையவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் 'சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை நடைமுறைகள் பற்றிய விழிப்புணா்வை கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயா, சிவக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • நம்ம ஊரு சூப்பரு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது.

    கரூர்

    புன்னம்சத்திரம் பகுதியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மந்திராசலம் கலந்துகொண்டு பேசுகையில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது. தொடர்ந்து நெகிழியை பயன்படுத்தும்போது ஏராளமான பாதிப்புகள் ஏற்படும். மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் நகர மற்றும் கிராமப்புறங்களில் வீதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்புமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் சாருமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×