search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narayanaswamy hoisted national flag"

    புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா உப்பளம் மைதானத்தில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். #IndependenceDayIndia #narayanasamy
    புதுச்சேரி:

    நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா இன்று அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்பட்டது. புதுவை அரசு சார்பில் சுதந்திர தினவிழா உப்பளம் மைதானத்தில் இன்று நடந்தது. விழாவையொட்டி உப்பளம் மைதானம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு மேடையும், கொடிக்கம்பமும் அமைத்திருந்தனர். 

    சரியாக காலை 8.58 மணிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்தார். அவரை தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் வரவேற்று அழைத்து வந்தார். நேராக மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டது. 

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். மீண்டும் மேடைக்கு திரும்பிய அவர் சுதந்திர தின உரையாற்றினார். 

    இதையடுத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதை நாராயணசாமி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. 

    விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச் சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி, சிவா, நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, முன்னாள் எம்.பி. ராமதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். #IndependenceDayIndia #narayanasamy
    ×