என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Natham"
- ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
- 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.
அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.
பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
செந்துறை:
நத்தம் அருகே உள்ள பூதகுடியை அடுத்த சுண்டக்காய்பட்டி விலக்கு பகுதியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவருக்கு சுமார் 53 வயது இருக்கும். அவர் வெள்ளை வேட்டி, சிவப்பு நிற சட்டை அணிந்திருந்தார். உடலில் நெற்றி, கால் உள்ளிட்ட இடங்களில் சிறு காயங்கள் இருந்தன.
இது தொடர்பாக நத்தம் போலீஸ் நிலையத்தில் பூதக்குடி கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி புகார் செய்தார். இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில் இறந்தவர் சேத்தூர் ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிச்சை (வயது53) என்பது தெரிய வந்தது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் பலியானதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நத்தம்:
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (24). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவரது தம்பி கணபதி (21).
இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் துவரங்குறிச்சிக்கு வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். இதில் கணபதி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.
நத்தம் அருகே உலுப்பகுடி பகுதியில் இவர் ஓட்டி வந்த வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது காரைக்குடியில் இருந்து நத்தம் வழியாக பழனிக்கு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ் இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கணபதி கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
இறந்தவர் உடல் நத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நத்தம்:
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பழமொழி அதற்கேற்ப விவசாயிகளின் வாழ்விலும் ஒரு வழிபிறக்கும் நாளாக இன்றளவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி பொங்கல் வைக்கும்போது கரும்பு,மஞ்சள்,மாவிலை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு எனும் கருப்பு கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஆவிச்சிபட்டி, சேர்வீடு, குட்டுர், காசம்பட்டி, வத்திபட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் ஆங்காங்கே இந்த கரும்புகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த கரும்பு குறித்து விவசாயி சீரங்கம்பட்டி அழகர்சாமி (55)கூறியதாவது:-
இந்த கருப்பு கரும்புக்கு வயது 10 மாதங்களாகும். கருப்புகரும்பு வேரோடு பறிக்கப்படுவதால் இந்த கரும்பை அறுவடை செய்து விட்டு மற்ற ஆலைகரும்பு போல் மறுதாம்பு விடமுடியாது. ஒரே மகசூல் மட்டுமே கிடைக்கும். இந்த கரும்பானது அதிக இனிப்புத்தன்மை வாய்ந்தது. ஆனால் வெல்லம் காய்ச்சுவதற்கு ஏற்றது அல்ல. தவிர ஒரு ஏக்கருக்கு அனைத்து செலவுகளையும் சேர்த்து அறுவடை செய்வது உள்பட ரூ.50ஆயிரம் வரை செலவாகும். வரவு சுமார் ரூ.90ஆயிரம் முதல் ரூ.1லட்சம் வரை கிடைக்கும்.
பொதுவாக விவசாய பணி வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது கடும் தட்டுப்பாடாக இருக்கிறது. அத்துடன் இயற்கையாக பெய்யும் மழையும், கிணறுகளில் உள்ள நீர் மட்டமும் குறையாமல் இருந்தால் தான் கரும்பு விவசாயம் லாபத்தை ஈட்டமுடியும். அதிகமான வேலைகள் இந்த கரும்பில் தான் உண்டு.
இதற்கெல்லாம் அரசு விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கினால் இந்த கரும்பை விவசாயிகள் விரும்பி பயிரிடுவார்கள். உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் ஒரு ஜோடி கரும்புத்தட்டை ரூ.40முதல் ரூ.50 வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் தினம் நெருங்கும் காலத்தில் இந்த கரும்புகள் அறுவடை செய்து மதுரை, திண்டுக்கல், மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராபட்டியைச் சேர்ந்தவர் முகமது சலீம்(30). இவரது சரக்கு வாகனத்தை தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இதை ஏற்கனவே நோட்டமிட்டு திட்டமிட்டிருந்த வாலிபர் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சரக்கு வாகனத்தை மாற்றுச் சாவி போட்டு எடுத்துச் சென்று விட்டார்.
இது பற்றி புகாரின் பேரில் நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சந்தேகப்படும் படியாக நத்தம் வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதை ஓட்டி வந்தவர் சிவகங்கை மாவட்டம், சக்கந்தி மில் கேட் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(24) என்பது விசாரணையில் தெரிய வந்தது. சமுத்திராபட்டியில் காணாமல் போன வாகனம் என்பது தெரியவரவே அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்