search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national award"

    • நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
    • விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சூரஜ் வெஞ்சரமூடு. மலையாள திரைப்பட நடிகரான இவர் தேசிய விருது பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூரஜ் ஓட்டிச்சென்ற கார் மோதி, மஞ்சேரியை சேர்ந்த சரத்(வயது31) என்ற வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து நடிகர் சூரஜ் மீது பாலாரிவட்டம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர் மீது வழக்கு பதியப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை மோட்டார் வாகன துறைக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் விளக்கம் கேட்டு நடிகர் சூரஜூக்கு மோட்டார் வாகன துறை 3 முறை நோட்டீசு அனுப்பியிருந்தது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. ஆகவே அவரது ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மோட்டார் வாகன துறை முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

    • மாநகராட்சிக்கான தேசிய விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமாருடன்‌‌ இணைந்து பெற்றுக் கொண்டார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தேசிய விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொரு ளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, மாநகராட்சிக்கான தேசிய விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் தினேஷ்குமாருடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை வழங்கி வாழ்த்து பெற்றார்.

    பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செய லாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சிறக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இதன் மூலம் இந்தியாவிலேயே கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது.

    முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், நான் மாநகர மேயராக பொறுப்பேற்ற பின் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், மேற்கொள்ளப்பட்ட சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக இந்தியாவிலேயே 3-வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இதனைத் தமிழக முதல்-அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது.
    • இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022-ம் வருடத்திற்கான போட்டியில் இந்த விருதினை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது பரிசுக்கு தேர்வாகியது.

    இந்திய அளவில் 3-வது இடம்

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரியிடம் இருந்து, மாநகராட்சிக்கான விருதினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமாருடன் இணைந்து பெற்றுக்கொண்டார். இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி யின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது பெருமை அளிக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மாநகர மேயராக நான் பதவியேற்ற பின்பு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

    கல்விப் பணியில் சமூக பொருளாதார கட்டமைப்பின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம் ,சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சி இந்திய அளவில் 3-வது இடம் பெற்று விருது மற்றும் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    தேசிய விருது

    இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022-ம் வருடத்திற்கான போட்டியில் இந்த விருதினை தூத்துக்குடி மாநகராட்சி பெற்றுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகர மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
    • அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

    திருவனந்தபுரம்:

    மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது. ஏராளமானோருக்கு இலவச சிகிச்சை அளிப்பதில் முன்னணியில் இருப்பதன் காரணமாக கேரளாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

    கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் காருண்ய ஆரோக்ய சுரக்க்ஷா என்ற திட்டம் மூலமாகவே ஆரோக்கிய மந்தன் விருது கேரளாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இலவச மருத்துவ சேவையை பெற முடியும். அந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 613 மருத்துவமனைகளின் மூலம் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றார்.

    • டெல்லி விஞ்ஞான் பவனில் வரும் செப்டம்பர் 5ம் தேதி விழா நடைபெறுகிறது.
    • விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், தமிழகத்தில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேசிய நல்லாசிரியருக்கான விருதுகள், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதிக்கும் வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

    • தமிழ் சினிமாவிற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இது ஒருபுறம் இருக்க 'ஜெய்பீம்', 'கர்ணன்', 'சார்ப்பட்டா பரம்பரை' போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


    இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் 'ஜெய்பீம்' படத்திற்கு தேசிய விருது ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்ற ஆயிரம் கேள்விகள். 5 விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி வாழ்த்துகள் என்று கூறினார்.

    • 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
    • இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

    தேசிய விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் முழு விவரம் வருமாறு:-

    சிறந்த திரைப்படம் : ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் (இந்தி)

    சிறந்த தமிழ் திரைப்படம்: கடைசி விவசாயி

    சிறந்த பிரபலமான திரைப்படம்: ஆர்ஆர்ஆர்

    சிறந்த இந்தி திரைப்படம்: சர்தார் உத்தம்

    சிறந்த தெலுங்கு படம்: உப்பெனா

    சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம் : தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    சிறந்த குஜராத்தி திரைப்படம்: செல்லோ ஷோ

    சிறந்த கன்னட திரைப்படம்: 777 சார்லி

    சிறந்த மராத்தி திரைப்படம்: ஏக் தா காய்சாலா

    சிறந்த மலையாள திரைப்படம்: ஹோம்

    சிறந்த இயக்குனர்: நிகில் மஹாஜன் (தி ஹோலி வாட்டர்)

    சிறந்த நடிகர்: அல்லு அர்ஜூன் (புஷ்பா)

    சிறந்த நடிகை: ஆலியா பட் (கங்குபாய் காத்தியவாடி), கீர்த்தி சனோன் (மிமி)

    சிறந்த உறுதுணை நடிகர் (ஆண்): பங்கஜ் திரிபாதி (மிமி)

    சிறந்த துணை நடிகை: பல்லவி ஜோஷி (தி காஷ்மீர் ஃபைல்ஸ்)

    சிறந்த குழந்தை நட்சத்திரம்: பாவின் ரபாரி (செல்லோ ஷோ)

    சிறந்த பின்னணி பாடகர் : காலபைரவா (ஆர்ஆர்ஆர்)

    சிறந்த பின்னணி பாடகி: ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்)

    சிறந்த ஒளிப்பதிவாளர்: அவிக் முகோபாத்யாயா (சர்தார் உதம்)

    சிறந்த தழுவல் திரைக்கதை எழுத்தாளர்: சன்ஜய் லீலா பன்சாலி, உட்டர்காஷினி (கங்குபாய் காத்தியவாடி)

    சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: ஷாயி கபீர் (நயாட்டு)

    சிறந்த படத்தொகுப்பு: சன்ஜய் லீலா பன்சாலி (கங்குபாய் காத்தியாவாடி)

    சிறந்த பின்னணி இசை: எம்.எம்.கீரவாணி (ஆர்ஆர்ஆர்)

    சிறந்த இசையமைப்பாளர்: தேவிஸ்ரீ பிரசாத் (புஷ்பா)

    சிறந்த ஒப்பனை கலைஞர்: பிரித்தீ சிங் (கங்குபாய் காத்தியாவாடி)

    சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்: ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்ஆர்ஆர்)

    சிறந்த நடன இயக்குனர்: ப்ரேம் ரக்ஷித் (ஆர்ஆர்ஆர்)

    சிறந்த சண்டைக் கலைஞர்: கிங் சாலமன் (ஆர்ஆர்ஆர்)

    • மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் “பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2023" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக “பால சக்தி புரஷ்கார்” என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

    புதிய கண்டுபிடிப்பு

    மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் "பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2023" அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனிதகுதி வாய்ந்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக "பால சக்தி புரஷ்கார்" என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகி யவற்றை கொண்டதாகும்.

    குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவை களில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக "பால கல்யாண் புரஷ்கார்" என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

    விண்ணப்பம்

    இவ்விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப் பித்தல் வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணை யதளம் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள் 31.08.2023 ஆகும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • இந்த விருது, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆறு சிறுவர்களும், ஐந்து சிறுமிகளும் இடம்பெற்றுள்ளனர்.
    • விருது பெறும் சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை அன்று கலந்துரையாடுகிறார்.

    மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கியதற்காக 5-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் (4), துணிச்சல் (1), புதுமை (2), சமூக சேவை (1) மற்றும் விளையாட்டு (3) என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், மேற்கூறிய பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 சிறுவர்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது-2023 வழங்கப்படுகிறது. இந்த விருதினை குடியரசு தலைவர் திரவுபடி முர்மு நாளை வழங்குகிறார்.

    இந்த விருது, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆறு சிறுவர்களும், ஐந்து சிறுமிகளும் இடம்பெற்றுள்ளனர்.

    பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து, விருது பெறும் சிறுவர், சிறுமிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் செவ்வாய்க்கிழமை அன்று கலந்துரையாடுகிறார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானியும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் முன்னிலையில் குழந்தைகளுடன் உரையாடி அவர்களை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துவார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொரோனா தொற்று காலத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை.
    • கடந்த மூன்று வருடங்களுக்கான விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.

    மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதாரத்தில் கைவினைத் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த துறை மூலம் கிராமப் புறங்களிலும் சிறு நகரங்களிலும் பெருமளவிலான கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

    கைவினைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் செயல்படுத்தி வருகிறது. 2002 ஆம் ஆண்டு ஷில்ப் குரு விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று காலத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய ஜவுளித்துறைஅமைச்சர் பியூஷ் கோயல் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். கடந்த மூன்று வருடங்களில் தேர்வு செய்யப்பட்டிருந்த சிறந்த கைவினை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியருக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.
    • இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது55). அரசு செவிலியராக பணியில் சேர்ந்த இவர் கடந்த 37 வருடங்களாக கன்னிசேரி புதூர், எம்.ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம உதவி செவிலியராக பணியாற்றி உள்ளார். பணியில் இருந்த போது அர்ப்பணிப்பு சேவையுடன் நோயாளிகளுக்கு மங்கம்மாள் சேவை செய்தார். தற்போது இவர் ஆர்.ரெட்டியபட்டியில் உதவி செவிலியராக உள்ளார்.

    இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது. அதன்படி மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அளித்தது. இதனை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு சான்றிதழை வழங்கி மங்காம்மாவை பாராட்டினார்.

    அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மங்கம்மாள் தேசிய விருது பெற்று விருதுநகர் மாவட்டத்தை பெருமை அடைய செய்துள்ளார்.

    • முன்னோடி விவசாயிகள், கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • விருதுநகரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய அளவில் சிறப்பாக செயல்பாட்டில் இருப்பவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க ''ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம்'' மூலம் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    முதலாவதாக முன்னோடி விவசாயிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு 50 பசுவினம் மற்றும் 17 எருமை இனங்களில் ஒன்றினை பராமரித்து நல்ல முறையில் கால்நடை செல்வத்தை பெருக்கி சிறப்பாக பண்ணை தொழிலை மேற்கொள்ளும் விவசாயிக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.

    அடுத்ததாக கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணியினை மேற்கொண்டு சிறப்பாக கிராமங்களில் பணிபுரிந்து அரசின் திட்டங்களில் பங்கேற்று மக்களுக்கு அதனை கொண்டு சென்ற விதத்தில் 90 நாட்கள் பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

    சிறப்பாக செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் குறைந்தது ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் சேகரிப்புடன் 50 உறுப்பினர்கள் உள்ளடக்கியதோடு அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் செவ்வனே செயல்பட்டு கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்படியாக இயங்கி வரும் சங்கங்களுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.

    இந்த விருதின் பெயர் ''தேசிய கோபால் ரத்னா'' விருது ஆகும். இந்த விருது தேசிய பால் தினமான நவம்பர் 26 அன்று மத்திய அரசால் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-வது பரிசாக ரூ. 3 லட்சம், 3-வது பரிசாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் இணையதளத்தில் (https://awards.gov.in/Home/Awardpedia?MinistryId=DO23&OnGoingAwards=1& ptype=P https://awards.gov.in/Home/AwardLibrary) விண்ணப்பிக்க வேண்டும்.

    நாளை (10-ந் தேதி) விண்ணப்பிக்க இறுதி நாளாகும். இந்த விருது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படின் ராஜபாளையத்திலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் விருதுநகரில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×