என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "National Mission for Clean Ganga"
- கங்கை தூய்மைக்கான தேசிய இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
- உத்தரப்பிரதேசத்தில் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள கங்கை ஆற்றுப் படுகையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக கங்கை தூய்மை தேசிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் 46-வது செயற்குழு கூட்டம் தலைமை இயக்குநர் ஜி அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் ரூ 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் கங்கை படுகையில் கழிவு நீரை அகற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி உத்தரப்பிரதேசத்தில் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பிரயாக்ராஜில் மட்டும் ரூ. 475.19 கோடி செலவில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் பீகாரின் தௌத் நகரிலும், ரூ. 42.25 கோடி செலவிலும், மோத்திகரில் 149.15 கோடி செலவிலும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் ரூ. 653.67 கோடி செலவில் ஆதிகங்கா ஆற்றின் மறுசீரமைப்பு திட்டத்தற்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தராகண்ட் உள்பட ஐந்து மாநிலங்களில் செயல்படுத்தப் படுகிறது.
- ஆற்றுப் படுகை மேம்பாடு, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45-வது நிர்வாக குழு கூட்டம் அதன் தலைமை இயக்குநர் ஜி.அசோக் குமார் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் வகையில் வடிகால் மேலாண்மை, தொழில்துறை மாசு கட்டுப்பாடு, பல்லுயிர் பாதுகாப்பு மரம் நடுதல், ஆற்றுப் படுகை மேம்பாடு மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு உள்பட 14 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து முக்கிய கங்கை நதிப் படுக்கையில் உள்ள மாநிலங்களில் கழிவுநீர் மேலாண்மைக்கான எட்டுத் திட்டங்கள் இதில் அடங்கும்.
ரூ. 308.09 கோடி மதிப்பில் நான்கு வடிகால் மேலாண்மை திட்டங்களை உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ள இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல அம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பல்லுயிர் பூங்காக்களை அமைக்கவும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்