search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nayanthara"

    • டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
    • நயன்தாரா மற்றும் தனுஷ் விழாவில் கலந்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நயன்தாரா மற்றும் தனுஷ் விழாவில் கலந்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று இரவு நடந்த திருமண பார்ட்டியில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு கலந்துக் கொண்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    சிம்பு மற்றும் தனுஷ் இடையே எப்பொழுதும் ஒரு பகை போட்டி இருக்கும் என திரையுலகில் இருப்பவர்கள் அறிந்ததே. ஆனால் அதை எல்லாம் பொய் என நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து விழாவில் கலந்துக் கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாராவின் 'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
    • தனது திருமண வீடியோ வெளியாமல் இருந்ததற்கு தனுஷ் தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார்.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் இன்று நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா ஒன்றாக கலந்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். நயன்தாரா சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் திருமண மேடை அருகே ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், கடந்த 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.

    இதற்கிடைய தனது கடந்த 2 ஆண்டுகளாக திருமண வீடியோ வெளியாமல் இருக்க தனுஷ் தான் காரணம் என நயன்தாரா பரபரப்பை ஏற்படுத்தினார். நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா அவரைக் குறித்த காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் ஆவணப்படம் உருவாகியுள்ளது
    • தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா அவரைக் குறித்த காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் வெளியானது.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், கடந்த 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.

     

    இதற்கிடைய தனது கடந்த 2 ஆண்டுகளாக திருமண வீடியோ வெளியாமல் இருக்க தனுஷ் தான் காரணம் என நயன்தாரா பரபரப்பை ஏற்படுத்தினார். நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா அவரைக் குறித்த காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

     

     

    படம் தற்போது வெளியான நிலையில் NOC வழங்கிய மற்ற தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுளளார். இதில் தனுஷின் பெயரை அவர் தவிர்த்துள்ளார்.

    அந்த அறிக்கையில்,  நமது Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது.

    அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனது திருமண வீடியோ வெளியாகாமல் இருந்ததற்கு தனுஷ் தான் காரணம் என நயன்தாரா குற்றச்சாட்டு.
    • எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் வெளியானது.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், கடந்த 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.

    இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    அதே சமயம் நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு, நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் தற்போது வரை வரவில்லை.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுதொடர்பாக அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசிய கஸ்தூரி ராஜா, "எங்களுக்கு வேலை தான் முக்கியம். நிற்க நேரமில்லாமல் நாங்கள் ஓடி கொண்டிருக்கிறோம். எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை. என்னைப் போலவே எனது மகனுக்கும் வேலை தான் முக்கியம்" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "நயன்தாரா தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆண்டுகள் தனுசுக்காகக் காத்திருந்ததாக கூறியது எல்லாம் பொய். இது தொடர்பாக இதற்கு மேலும் பேச எனக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்தார். 

    • திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
    • திரைப்படத்தை அறிமுக இயக்குனரான செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் இருப்பவர் நடிகை நயன்தாரா.

    இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த டீசரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. டைட்டில் டீசர் காட்சிகள் மிகவும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது . இது ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமா கதைக்களத்துடன் அமைந்துள்ளது.

    இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் இதற்கு முன் இமைக்கா நொடிகள், யானை, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படத்தை அறிமுக இயக்குனரான செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார். படத்திற்கு ராக்காயி என்ற தலைப்பு வைத்துள்ளனர். திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். கவுதம் ராஜேந்தர் ஒளிப்பதிவு செய மற்றும் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படம் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    படத்தில் நடித்துள்ள மற்ற சக நடிகர்கள்களை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.
    • ஆவண திரைப்படத்தில் நடிகர் தனுஷ் குறித்து சர்ச்சை காட்சி பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். நடிகை நயன்தாராவின் அறிக்கைக்கு நடிகைகள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். நடிகர் தனுஷுடன் நடித்த நடிகைகள் சிலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்பிறகு சில நடிகைகள் தங்களின் பதிவை நீக்கினார்கள்.

    இந்தநிலையில் நடிகை நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் நடிகை நயன்தாரா பற்றி இணையதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஆவண திரைப்படத்தில் நடிகர் தனுஷ் குறித்து சர்ச்சை காட்சி பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானும் ரௌடி தான் திரைப்படத்தின் தான் நயன் தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்தது.

    ஆனால் இப்படம் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமாக சென்றது. தனுஷ் அப்படத்திற்கு தன்னால் முடிந்தளவுக்கு உழைப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நயன் தாரா - விக்கி இடையே காதல் மலர்ந்த சம்பவத்தை , ஆவணப் படத்தில் நினைவுக்கூர்ந்த நடிகை ராதிகா பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்பொழுது நயன் - விக்கி ஜோடி ஊர் சுற்றுவதை சுட்டிக் காட்டி பேசிய தனுஷ் . வெட்கம், மானம் இல்லையா? என தன்னிடம் கேட்டதாக ராதிகா பேசும் காட்சி ஆவண திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் தற்பொழுது சர்ச்சை எழும்பியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா அவர் மீது குற்றம் சாட்டியது. இணையத்தில் மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது.
    • இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்‌ஷன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் வாழ்க்கை ஆவண திரைப்படம் நாளை இவர் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனுஷ் இந்த படத்தில் இடம் பெற்ற நானும் ரவுடி தான் திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா அவர் மீது குற்றம் சாட்டியது. இணையத்தில் மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது.

    இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில் நயன்தாரா கையில் உலக்கை வைத்து இருக்க அவருக்கு முன் பெரிய பெரிய ரவுடிகள் இருப்பது போல காட்சிகள் அமைந்துள்ளது. இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் மற்றும் மூவிவெர்ஸ் இந்தியா தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன் இதற்கு முன் இமைக்கா நொடிகள், யானை, திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற வெற்ரி திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள்களை பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகைகள் சிலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
    • அறிக்கை முழுக்க முழுக்க சுய விளம்பரத்துக்கானது.

    நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். நடிகை நயன்தாராவின் அறிக்கைக்கு நடிகைகள் பலர் தங்களது ஆத ரவை தெரிவித்து இருந்தனர். நடிகர் தனுசுடன் நடித்த நடிகைகள் சிலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன்பிறகு சில நடிகைகள் தங்களின் பதிவை நீக்கினார்கள்.


    இந்தநிலையில் நடிகை நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் நடிகை நயன்தாரா பற்றி இணையதளத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    நடிகர் தனுஷ் ரசிகர்கள் சிலர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு:-

    நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. எனவே தனது திருமண ஆவணப்படத்தை பிரபலப் படுத்துவதற்காக நடிகை நயன்தாரா 2 நாட்களுக்கு முன்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


    இந்த அறிக்கை முழுக்க முழுக்க சுய விளம்பரத்துக்கானது. நயன்தாரா தான் நடிக்கும் படங்களை பிரபலப் படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அவர் தயாரிப்பாளர்களை பற்றி கவலைப்பட்டதில்லை.

    ஆனால் தங்களது சொந்த ஆவணப்படத்தை பிரபலப்படுத்த இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதேபோல் தனது அழகு சாதனப்பொருள் நிறுவனத்தை பிரபலப்படுத்தவும் அவர் எங்கும் செல்வார். நடிகை நயன்தாரா பணம் வாங்கிக் கொண்டுதான் தனது சொந்த திருமண ஆவணப் படத்தை வெளியிடுகிறார்.

    அவர் சும்மா கொடுக்க வில்லை. அப்படி இருக்கும் போது, தான் தயாரித்த படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் பணம் கேட்பதில் என்ன தவறு? நானும் ரவுடிதான் படத்தின் செலவு எதிர்பார்த்ததை விட 2 மடங்கு ஆனதால் அப்போது அவருக்கு லாபம் கிடைக்கவில்லை.

    தனுசை மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள அறிவுறுத்தும் நயன்தாரா, தன் திருமண ஆவணப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் கட்டணம் இன்றி பார்க்கும் வகையில் வெளியிடுவாரா?

    தனுசும் தன் பங்கிற்கு பதில் கொடுத்தால் அது இந்த விவகாரத்தை பரப ரப்பாக்கி நயன்தாராவின் ஆவணப்படத்தை பிரபலப் படுத்துவது போல் ஆகி விடும் என்பதால் தனுஷ் அமைதியாக இருக்கிறார்.

    திருமண ஆவணப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதை பெரிதாக யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதால் அதை பிரபலப்படுத்தும் விதமாக நடிகை நயன்தாரா இந்த சர்ச்சையை கிளப்பி வியாபாரம் பார்த்து வருகிறார். பல தொழில்களை ஆரமபித்து நடத்தி வரும் நயன்தாரா முழு தொழில் அதிபராக மாறிவிட்டார்.

    இவ்வாறு தனுஷ் ரசிகர் கள் கூறியுள்ளனர்.

    தனுஷ் ரசிகர்கள் இன்னும் பலர் நயன்தாரா வின் வீடியோக்களையும் பகிர்ந்து கருத்து தெரிவித்து உள்ளனர். 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவை தனுஷ் தலையில் அடித்து 'இன்னொருவாட்டி கத்துன கொன்னுருவேன்' என வசனம் பேசும் காட்சிகளை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளனர்.

    மேலும் நயன்தாரா நடித்த நிழல், நெற்றிக்கண், ஓ2, அன்னபூரணி உள்ளிட்ட பல தோல்வி படங்களில் பெயர்களை பட்டியலிட்டு இவருக்கு யாரு லேடி சூப்பர் ஸ்டாருன்னு பட்டம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    நயன்தாரா 3 நிமிட விளம்பர படத்தில் இலவசமாக நடித்து கொடுப்பாரா? அவருக்கு ஒரு நியாயம், தனுசுக்கு ஒரு நியாயமா? என்றும் சிலர் விமர்சித்து உள்ளனர்.

    மேலும், நயன்தாரா தனது இளமை காலத்தில் கவர்ச்சியாக பாடல்களில் நடித்த காட்சிகளையும், பில்லா படத்தில் பிகினி உடையில் நடந்து வரும் காட்சிகளையும் வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர்.

    எல்லாவற்றுக்கும் மேலாக 'வல்லவன்' படத்தில் நயன்தாரா நடித்த முத்தக்காட்சி வீடியோவையும் பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    • தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம்.
    • நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர்.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிடவுள்ளது.

    இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதனிடையே வாழு வாழவிடு என்று தனுஷ் பேசிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார்.

    அந்த பதிவில், "வாழு வாழவிடு. இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி டை ஹார்ட் ரசிகர்களுக்காகவாவது.. மக்கள் மாறுவதற்கும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியைக் காண்பதற்கும் நான் கடவுளை மனதார வேண்டிக்கொள்கிறேன்!" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், தனுஷ் தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தனுஷ் முன்பு பேசியிருந்த வீடியோ மற்றும் அதன் பதிவை நீக்கம் செய்துள்ளார்.

    • அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
    • தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு அது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு விற்கப்பட்டது. இந்த ஆவணப்படம் 'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் வரும் 18 ஆம் தேதி நயன்தாரா பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட உள்ளது.

    இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடையில்லா சான்றிதழ் (NOC) தராமல் இழுத்தடித்ததோடு மட்டுல்லாமல் தற்போது 10 கோடி நஷ்டஈடு கேட்டும்  தனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

     

    தனது நீண்ட அறிக்கையில் ஒரு இடத்தில் குறிப்பிட்ட நயன்தாரா, உங்களின்[ தனுஷின்] கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் "Schadenfreude" எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

    திடுதிப்பென நயன்தாரா தனுஷுக்கு அறிமுகப்படுத்திய இந்த ஜெர்மன் சொல்லின் அர்த்தம் என்ன என்று பலருக்கும் இணையத்தில் தேடி வருகின்றனர். நயன்தாரா குறிப்பிட்ட "schadenfreude" என்ற ஜெர்மன் மொழி வார்த்தைக்கு, "மற்றவர் துயரத்தை கண்டு ஒருவர் இன்பம் கொள்வது அல்லது திருப்தி அடைவது" என்பது பொருளாகும்.

    தனுஷை இத்தனை காட்டமாக நயன்தாரா திட்டுவதற்கும், இந்த மொத்த குற்றச்சாட்டுக்கும் பின்னால் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே இருக்கும் அந்த தனிப்பட்ட பகை என்ன என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு ரூ.10 கோடி கேட்ட தனுஷ்.
    • தனுஷின் செயலை வன்மையாக கண்டிக்கும் நயன்தாராவின் பதிவிற்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தனுஷின் செயலை வன்மையாக கண்டிக்கும் நயன்தாராவின் பதிவிற்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவிற்கு எதிராக இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் 2 வருடம் பொறுமையோடு அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரத்தோடு நடந்து கொண்டு என்னை மன உளைச்சல் ஆக்கியதற்கு நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, எஸ்.எஸ்.குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

    LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.

    என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள்.

    உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.

    இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

    என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.

    எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதி யோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

    நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம்
    • நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை.

    நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளனர்.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், வரும் 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிடவுள்ளது.

    இந்நிலையில் தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தனுஷை வன்மையாக கண்டிக்கும் நயன்தாராவின் பதிவிற்கு லைக் செய்து நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு, நடிகர் தனுஷ் தரப்பு விளக்கம் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    ×