என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nazarath"
- நாசரேத்தில் உள்ள வீட்டில் சில்வான்ஸ் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் கடந்த 23 -ந் தேதி வேலை விஷயமாக சென்னை சென்றார்.
- வீட்டில் இருந்த டி.வி., விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கதீட்ரல்ரோட்டில் வசித்து வருபவர் அகஸ் டின் ஸ்பர்ஜர்.இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகன் சில்வான்ஸ் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
கடந்த2 மாதங்களுக்கு முன்பு அகஸ்டின் ஸ்பர் ஜரின் மனைவி இறந்து விட் டதால் இறப்புக்கு வந்த மகள் தனது தந்தையை அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். நாசரேத்தில் உள்ள வீட்டில் சில்வான்ஸ் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் கடந்த 23 -ந் தேதி வேலை விஷயமாக சென்னை சென்றார்.
இன்று காலை வீட்டு முற்றத்தை பெருக்குவதற்கு ஊழியர் வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த டி.வி., விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அகஸ்டின் ஸ்பர்ஜரின் உறவினர் ஆஸ்டின் மைக்கேல் நாசரேத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாசரேத்:
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஆனந்தபாண்டி (வயது 51). இவர் நாசரேத் உப மின்நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை பணியில் இருந்த ஆனந்தபாண்டி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தபாண்டியை கொலை செய்தவர்கள் யார் ? எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை தொடர்பாக சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர்கள் பட்டாணி, பவுலோஸ் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படையினர் அப்பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் உள்ளிட் டவைகளை கொண்டு கொலை யாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்