என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NEET Case"
- தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கும் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- இறுதியாக நீதிமன்றத்தை விட்டு வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா வெளியேறினார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.
நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாக பேசப்பட்டது.
எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்று நீட் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மூத்த வழக்கறிஞர் நரேந்திர ஹூடா தனது வாதங்களை முன்வைத்து கொண்டிருக்கும் போது மூத்த வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா அடிக்கடி குறுக்கிட்டு இடையூறு செய்தார்.
இதனால் கோவமான தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கும் வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: இங்குள்ள வழக்கறிஞர்களின் நான்தான் சீனியர். நான் உங்களின் நண்பர்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: நான் எந்த நண்பரையும் இங்கு நியமிக்கவில்லை.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நான் உங்களின் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: எனக்கு உங்களின் பதில்கள் தேவையில்லை. அமைதியாக அமருங்கள். இல்லையென்றால் நீதிமன்றத்தை விட்டு உங்களை வெளியேற்றி விடுவேன்.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நீங்கள் என்னை மதிக்கவில்லை என்றால், நானே நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்று விடுவேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: வழக்கறிஞர் ஹூடா வாதாடும் பொது வேறு யாரும் குறுக்கிடுவதை நன் விரும்பவில்லை.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லி கொள்கிறேன்.
தலைமை நீதிபதி சந்திரசூட்: தயவு செய்து காவலர்கள், வழக்கறிஞர் மேத்யூ நெடும்பராவை நீதிமன்ற அறையில் இருந்து வெளியேற்றுங்கள்.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நானே நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்கிறேன். ஆனால் இது நியாயமற்றது.
தலைமை நீதிபதி சந்திரசூட்: இதை நீங்கள் சொல்லவேண்டிய தேவையில்லை. கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை நான் பார்த்து வருகிறேன். நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையில் வழக்கறிஞர்கள் உத்தரவிட அனுமதிக்க முடியாது.
வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா: நான் நீதித்துறையை 1979 ஆம் ஆண்டிலிருந்து பார்த்து வருகிறேன்.
உச்ச நீதிமன்ற தலைமை வழக்கறிஞர்: இது நீதிமன்ற அவமதிப்பு
இறுதியாக நீதிமன்றத்தை விட்டு வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா வெளியேறினார்.
- நீட் தேர்வுக்கு எதிரான வழக்கானது தாமாகவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக நாளை பட்டியலிடப்பட்டுள்ளது.
- இந்த முறையாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீட் வழக்கை வெற்றிகரமாக நடத்தவேண்டும்.
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து நடத்தி தமிழக மாணவர்களுக்கு விடியலைக் கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்த எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அந்த வழக்கானது தாமாகவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக நாளை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் நடத்த மனமில்லாமல் திமுக அரசு வாய்தா கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் தரவரிசைப் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் திமுக அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் எனவும் அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்த முறையாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீட் வழக்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களக்கு எதிராக பொய் வழக்குகளை தொடுப்பதற்காக செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது நீட் வழக்கிற்காக ஒதுக்கி தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். எப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள் ஸ்டாலின் அவர்களே.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்