search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Apartments"

    • நெல்லை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ரெட்டியார்பட்டியில் ரூ.41 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
    • பகுதி 2-ல் மேலும் 700 வீடுகள் கட்டப்படுகிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை சார்பில் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

    அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ரெட்டியார்பட்டியில் ரூ.41 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் பகுதி1-ல் 480 வீடுகள் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.பின்னர் குழுக்கள் முறையில் மற்ற பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.

    பகுதி 2-ல் மேலும் 700 வீடுகள் கட்டப்படுகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×