search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new app"

    • புதிய செயலியால் 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
    • இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பகுதியில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அரசு பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை பணிகளை செய்து வருகின்றது.

    இதை நிர்வாகம் செய்ய தலைவர் ,துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் உள்ளனர். தற்போது தமிழக அரசு ஊராட்சி நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில் மாநில அரசின் நிதியை வங்கிக் கணக்கு மூலமாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    வங்கி கணக்குகளை நிர்வாகம் செய்ய ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகிய 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுவதால் பணம் எடுக்க முடியவில்லை.

    இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் உரிய தொகை வழங்க முடியவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது.

    கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், புதுவை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை தாங்கி பேசினர்.

    புதுவை மாநில போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், செல்வம் வீரவல்லவன் கடலூர் மாவட்ட டி.எஸ்.பி.க்கள் பிரபு, சபியுல்லா, விஜயகுமார், நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச போலீசாருக்கு இடையேயான செயல்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்து விவாதித்தனர்.

    விவாதத்தில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பகிர்தல்-சேகரித்தல், எல்லைச் சோதனைச் சாவடிகளில் விழிப்புடன் இருக்கும் போலீசார் மூலம் போலி மதுபானங்கள், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை சட்ட விரோதமாக கொண்டு செல்வதைக் கட்டுப்படுத்துதல்.

    சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்தல், குற்றத் தடுப்பு அம்சத்தில் கூட்டு ரோந்து, மாநிலங்களுக்கு இடையேயான போலீசார் குற்றப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஒருங்கிணைப்பு, எல்லை பகுதியில் ரவுடிகள் நடமாட்டத்தை கண்காணிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த கூட்டம் எல்லை பகுதியில் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கிடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. இரு புறத்தில் இருந்து வரக்கூடிய குற்ற நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வது. இதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும். இரு மாநில எல்லை போலீசாரிடையே தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வாட்ஸ் அப் செயலி ஏற்படுத்தப்படும்.

    இரு மாநில போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். எல்லைப்புற போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசாரிடையே மாதம் தோறும் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் எல்லைபுற போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு, குற்றப்பிரிவு, அமலாக்க பிரிவு போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 

    • சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் அனைத்து வகையான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்கள், மொத்த கொள்முதல் விற்பனை நிறுவனங்கள் மற்றும் மறுபொட்டலமிடுபவர், ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும், உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதில், தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு 'ஏதுவாக www.foodsaftey.tn.gov.in என்ற புதிய இணையதளத்தையும், tn food safety consumer app என்ற செயலியையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதிகளுடனும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஸ்கீரீன் ரீடர் அணுகள் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்டராய்டு ஐஓஎஸ்ஸில் பதிவிறக்கம் செய்யலாம்.

    மேலும், இந்த இணையத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தொடர்பு எண்கள், சேவைகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த இணைய இணைப்புகள் குறிப்பாக பதிவு மற்றும் உரிமம் விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள், புகார் வசதிகள் போன்ற அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறியதாவது தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்கள்பொது மக்கள் இதற்கான இணையதளம் மற்றும் கைபேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.

    மேலும், புகார்தாரரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரம் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் கூறியதா வது:-

    "நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி, ஆர்யுசிஒ, உணவு செரிவூட்டல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விழிப்புணர்வு குறும்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், யூடியூப் போன்ற சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.
    • செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் வாகன ஓட்டுநா்கள் உறங்குவதை எச்சரிக்கும் வகையில் புதிய செயலியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் தொடங்கி வைத்தாா். வாகன ஓட்டுநா்கள் இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கும்போது தங்களை அறியாமலேயே உறங்குவதால் அதிக அளவு விபத்து ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் பல்வேறு செயலிகள் நடைமுறையில் உள்ளன.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் லேம்ஸ் ஆட்டோ மேஷன் என்ற நிறுவனம் இதற்கான செயலியை உருவாக்கியுள்ளது. இரவு நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநா்க ளுக்கு உறக்கம் வந்தால் இந்த செயலி வாகன ஓட்டுனா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் நெடுஞ்சாலை களில் கனரக வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது இந்த செயலி மூலம் தீயணைப்புத் துறையினா், காவல் துறையினா் மற்றும் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது .

    இந்த செயலியை ஊட்டியை அடுத்த கேத்தி பகுதியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தனியாா் பொறி யியல் கல்லூரியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.கனரக வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினரை அழைத்து இந்த செயலி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனா்கள் மற்றும் உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

    • அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது.
    • 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட போக்குவரத்து தலைமை அலுவலக அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது. இவர்கள் கடந்த 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர். தலைமை அலுவலக மத்திய பணிமனை தொழில் நுட்ப பணியாளர், பாதுகாவலர், மேற்பார்வையாளர், பிரிவு அலுவலர்கள் இம்முறையில் நாளை முதல் (1-ந்தேதி) விடுப்பு எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம், படிப்படியாக மற்ற பணிமனைக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.  

    • வரி செலுத்தவும், குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும் விரைவில் திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது
    • இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருக்கும் மொபைல் அப்ளிகேஷனை மாற்றிவிட்டு புதிதாக அறிமுகம் செய்ய உள்ளனர்.

    இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும். இதில் மாநகர வாசிகள் முன்பதிவு செய்து தேவைகளை நிவர்த்தி செய்யலாம். அது மட்டும் அல்லாமல் புகார்கள் அளிக்கும் வசதி, வரி செலுத்துதல் போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது.

    மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒரு இடத்தையும் ஒதுக்கியுள்ளனர். இந்த புதிய செயலிக்கு திருச்சி சிட்டிசன் ஆப் என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவாது என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இருப்பதால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு செயலி மூலம் உதவ முடியும் என்கிறார்கள்.

    மீனவர்களுக்கான புதிய செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து மேலும் மேம்படுத்த முயற்சி செய்வோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். #ISRO #ISROChairman
    ஆலந்தூர்:

    இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட் மூலமாக ஜி.சாட்7ஏ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 35 நாட்களில் 3-வது செற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

    இது 3-வது தொலைதொடர்பு செயற்கைகோள். நவீன தொழில்நுட்பத்துடன் 6 மாதம் கூடுதலாக இயங்கக்கூடியது. அடுத்த வருடம் இன்னும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டிருக்கிறோம்.



    மீனவர்களுக்கான செயலியை தமிழக அரசிடம் வழங்கி உள்ளோம். அவர்கள் பயன்படுத்துவதை பொறுத்து அதை இன்னும் மேம்படுத்த முயற்சி செய்வோம். மங்கள்யான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ISRO #ISROChairman

    ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்போனில் புதிய செயலியை பயன்படுத்தி 80 பெண்களின் அந்தரங்க தகவல்களை திருடிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகேயுள்ள தாமரை ஊரணியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். எம்.சி.ஏ. பட்டதாரி.

    அந்த பகுதியில் உள்ள தனது உறவுக்கார பெண் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார் தினேஷ் குமார். அவரிடம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த ஸ்மார்ட் போனை கொடுத்து அதில் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து கேட்டுள்ளார் அந்த பெண்.

    அந்த ஸ்மார்ட் போனில் டிராக் வியூ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்த தினேஷ்குமார் அந்த டிராக் வியூ செயல்பாட்டை தனது செல்போன் மூலம் கட்டுப்படுத்த ஏதுவாக வழிவகை செய்துள்ளார்.

    அந்த போனில் இருந்து அந்த பெண் கணவருடன் பேசும் அத்தனை அந்தரங்க விவகாரங்களையும் தன்னுடைய டிராக் வியூ செயலி மூலம் லேப் டாப்பில் பதிவு செய்துள்ளான் தினேஷ் குமார்.

    அவர் கணவருக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளான். அதனை வைத்து, தான் யார் என்று தெரிவிக்காமல் அந்த பெண்ணை மிரட்டி ஆசைக்கு இணக்கும் படி வற்புறுத்தி உள்ளான். பணியாவிட்டால் அந்தரங்க காட்சிகளையும் படங்களையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளான்.

    இதையடுத்து கடந்த ஒரு வாரமாக செய்வதறியாமல் தவித்த அந்த பெண் இந்த விவகாரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். அவர், தனது சகோதரி அனுப்புவது போல, ஒரு குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் தனிமையில் சந்திக்கலாம் என்று கூறி தினேஷ்குமாரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி உள்ளார்.

    அதனை உண்மை என்று நம்பிய தினேஷ் குமார் அங்கு வந்துள்ளார். அவனை பார்த்ததும் அந்த பெண்ணின் சகோதரரரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தினேஷ்குமார் உறவு முறையில் அந்த பெண்ணிற்கு தம்பி என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

    உடனடியாக தினேஷ் குமாரை பிடித்து விசாரித்த போது அவன் தான் அந்தரங்க வீடியோ மற்றும் புகைபடங்களை டிராக் வியூ ஆப் மூலம் திருடி வைத்துக்கொண்டு மிரட்டிய சைக்கோ என்பது தெரியவந்தது. அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தினேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவனது வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது அங்கிருந்து 2 மடி கணினிகள், 3 செல்போன்கள், பெண்களின் ஆடைகளையும் பறிமுதல் செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி ஒன்றில் கணினி டெக்னீசியனாக பணிபுரிந்த போது கல்லூரியில் படித்த மாணவி ஒருவரின் செல்போனில் இருந்து வீடியோக்களை திருடி மிரட்டி உள்ளார். அந்த பெண் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததால் தினேஷ் குமாரை அடித்து விரட்டி உள்ளனர். அப்போது காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கவில்லை.

    அதன்பின்னர் தான் சந்தித்த உறவுக்கார பெண்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவரது ஸ்மார்ட் போனையும் வாங்கி பார்ப்பது போல அவர்களது போனில் டிராக் வியூ செயலியை பதிவிறக்கம் செய்து அவற்றை தனது செல்போன் மற்றும் மடி கணினியின் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளான்.

    அந்தரங்க காட்சிகளுடன் சிக்கும் பெண்களை மிரட்டி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளான். அப்படி ஆசைக்கு இணங்கிய பெண்களின் ஆடைகளை மட்டும் அவனது வீட்டில் சேகரித்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசைக்கு இணங்காத பெண்களின் வீடியோக்களை ஆன்லைன் மூலம் வெளிநாடுகளில் உள்ள ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகின்றது.

    தினேஷ்குமார் வெளிநாட்டில் இருந்து பேசுவது போல இணைய வழி தொலைபேசி மூலம் பலரிடம் பேசி உள்ளான். இதனால் அவனை யார் என அடையாளம் காணமுடியாமல் பல பெண்கள் தவித்துள்ளனர்.


    அவனது ஒரு மடிக்கணியில் இருந்து மட்டும் 80-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க காட்சிகளையும், ஏராளமான பெண்களின் அந்தரங்க உரையாடல்களையும் காவல்துறையினர் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

    இதில் பெரும்பாலானோர் தினேஷ்குமாரின் உறவினர்கள் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

    இதில் அவன் உடன் பிறந்த சகோதரி தனது கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல்களும் , கணவருடன் உள்ள அந்தரங்க புகைபடங்களையும் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    தினேஷ்குமார் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன், தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் ஆகியோர் தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×