என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை ஒன்றியத்தில் புதிய செயலியால் பணம் எடுக்க முடியாமல் தவிப்பு
- புதிய செயலியால் 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
- இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பகுதியில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அரசு பொதுமக்களுக்கு பல்வேறு அடிப்படை பணிகளை செய்து வருகின்றது.
இதை நிர்வாகம் செய்ய தலைவர் ,துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் உள்ளனர். தற்போது தமிழக அரசு ஊராட்சி நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில் மாநில அரசின் நிதியை வங்கிக் கணக்கு மூலமாக நிர்வாகம் செய்து வருகின்றனர்.
வங்கி கணக்குகளை நிர்வாகம் செய்ய ஊராட்சித் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகிய 3 நபர்கள் மூலமாக கடவு சொல்லை பயன்படுத்தி தான் வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியும். கடவுச்சொல் வருவதற்கு தாமதம் ஏற்படுவதால் பணம் எடுக்க முடியவில்லை.
இதனால் கடந்த 2 மாதங்களாக அடிப்படைப் பணிகள் செய்வதற்கு தேவையான பணத்தை எடுக்க முடியவில்லை. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவ தால் அனைத்து வகையான பணியாளர்களுக்கும் உரிய தொகை வழங்க முடியவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.