என் மலர்
நீங்கள் தேடியது "new building"
- சிவகிரி அருகே உள்ளார் - தளவாய்புரம் கிராம ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
- யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஆணையாளர் ஜெயராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ளார் - தளவாய்புரம் கிராம ஊராட்சிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஊராட்சியை பசுமை ஆக்கும் நோக்கில் ஊராட்சி மன்ற வளாகத்தில் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், ஆணையாளர் ஜெயராமன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பி னர்கள் நாச்சியார், சுப்பிர மணியத்தாய், இசக்கித் துரை, பேச்சியம்மாள், ஊராட்சி செயலர் பொறுப்பு சண்முகையா, தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி ஊராட்சி பகுதியில் விவசாயிகளின் நலனுக்காக நெற்களம் அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சந்திரலீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவகிரி பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், விஸ்வை ஊராட்சி மன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், வாசு ஒன்றிய கவுன்சிலர்கள் கனகராஜ், முனியராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன், கிளை செயலாளர் ராமமூர்த்தி, குருநாதன், காஜாமைதீன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.3.41 கோடியில் புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
- மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சம்மந்தபுரம் கிராமத்தில் ரூ.3.41 கோடி மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.
கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். தனுஷ் குமார் எம்.பி., ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரா ட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதி திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, ரூ.341.50 லட்சம் மதிப்பில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) அனிதா, ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான ரெயில்கள் தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- முன்பதிவு செய்வதற்காக தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சந்திப்பு ரெயில் நிலையம் வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான ரெயில்கள் தமிழகம் மட்டுமின்றி மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ரெயில் கள் இயக்கப்படுகிறது.
இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது.
புதிய கட்டிடம்
முன்பதிவு செய்வதற்காக தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சந்திப்பு ரெயில் நிலையம் வருகிறார்கள். இதனால் முன்பதிவு செய்வதற்காக புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது.
அதன் பின்னர் பழைய கட்டிடத்தில் உள்ள 3 கவுண்டர்களில் நடைமேடை டிக்கெட் மற்றும் உடனடி டிக்கெட்களும் வழங்கப்பட்டு வந்தது.புதிய கட்டிடத்தின் 3 கவுண்டர்களிலும் முன்பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
பயணிகள் கூட்டம்
ஆனால் சமீபத்தில் பழைய கட்டிடத்தில் ஒரு கவுண்டரில் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டது. இதனால் மற்ற 2 கவுண்டர்களில் மட்டும் வழக்கமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் பழைய கட்டிடத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இதனால் பழைய கட்டிடத்தில் இன்று வழக்கம் போல் சாதாரண டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
மேலாளர் பேட்டி
இதுகுறித்து நெல்லை ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் கூறியதாவது:-
பயணிகள் சிரமத்தை போக்கும் வகையில் பழைய முறையில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகள் இன்று முதல் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே வழக்கம்போல் அங்கு டிக்கெட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.
எனினும் பழைய கட்டிடத்தில் உள்ள கவுண்டர்களில் கூட்டம் இல்லாத நேரத்தில் முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதேபோல் புதிய கட்டிடத்தில் உள்ள கவுண்டர்களில் பயணிகள் இல்லாத போது நடைபாதை டிக்கெட் மற்றும் சாதாரண டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
- அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் தலைமையில் செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலையில் கூட்டம் நடந்தது.
இதில் பேரூராட்சியின் தற்போதைய கட்டிடம் பழைமையான கட்டிடம் என்பதாலும், அங்கு போதிய இடவசதி இல்லாத கார ணத்தாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் சீரணி அரங்கம் பகுதியில் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக நடைபெற்ற ஆேலாசனை கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. நகர செயலாளர் வாசு பேசும்போது, புதிய பேரூராட்சி கட்டிடத்தை தவிர வர்த்தக பயன்பாட்டிற்காக வேறு எந்த ஒரு கட்டிடமும் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகி களும் பேசினர்.
கூட்டத்தில் சிறுவர் பூங்கா அருகே மஞ்சு விரட்டு மணி செய்யும் தொழிலாளர்களை மாற்று இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. நிர்வாகி விடுத்தார். அதற்கு தி.மு.க. கவுன்சிலர் மணிசேகரன் கூறும்போது, சிங்கம்புணரி நகருக்கான கோவில் ஊழியம் செய்யும் சிறு தொழில் செய்யும் அவர்களின் வாழ்வா தாரத்தை நசுக்ககூடாது. அவர்களுக்கு அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனே பேரூராச்சி தலைவர் அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
- திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
- பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்துக்கு கடந்த 1957-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கக்கன் 1958 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டிடம் கட்டுவது என தீர்மானம் செய்யப்பட்டது.
இதற்காக அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அலுவலகத்திற்கு பின்பகுதியில் தற்காலிக அலுவலகத்திற்காக ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்த நிலையில் ஏற்கனவே இருந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, உஷாராணி, மாயாண்டி, சாந்தி மற்றும் அலுவலக பணியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் தலைவர் வேட்டையன் பங்கேற்காமல் நிகழ்ச்சியை புறக்கணித்தார். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் 4 கவுன்சிலர்கள் மட்டுமே பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
- கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டது
- அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா கோட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 23. 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து, தமிழக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை, தி.மு.க. மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தமிழ் ஐயா பரமசிவம், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, இளைஞரின் அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், ஆரஞ்சு பாப்பா குணசேகரன், செல்லப்பிள்ளை, அருணாச்சலம், கல்லாக்கோட்டை முத்துக்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
- சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.
சீர்காழி:
சீர்காழி அருகே அகணி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ரூ.22.65லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
அகணி ஊராட்சி மன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டமுடிவு செய்யப்பட்டு எம்ஜிஎன்ஆர்ஜிஎஸ் திட்டத்தில் ரூ.12லட்சத்து 65ஆயிரம், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.10லட்சம் என மொத்தம் ரூ.22.65லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் என்.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியக்குழு துணை தலைவர் நந்தினிபிரபாகரன் வரவேற்றார்.சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பயன்பாட்டிற்கு அளித்தார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தியாக.விஜயேஸ்வரன், தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் சசிக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் தமிழ்வேணி, சமூக ஆர்வலர் கோ.அ.ராஜேஷ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நிறைவில் ஊராட்சி செயலர் வீரமணி நன்றிக்கூறினார்.
- கனிமொழி எம்.பி. தனதுபாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
- அடிக்கல் நாட்டு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே பெரியதாழை ஆர்.சி தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட ஊர் மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் முறையிட்டனர். அதன்படி அவரது பாராளுமன்ற நிதியில் பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
அதன்படி கட்டிடம் கட்டுப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
தமிழக மீன்வளம், மீன்வர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வரவேற்றார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அங்குள்ள பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
அப்போது சாத்தான்குளம் வட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், தங்களை தரக்குறைவாக பேசுவதுடன், பணி நிமித்தம் தொடர்பாக டார்சர் செய்வதாகவும் அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு சரியான அதிகாரி நியமிக்கப்படுவார் என உறுதி அளித்தனர்.
இதில் பெரியதாழை பங்குதந்தை சுசீலன், திருச்செந்தூர் தாசில்தார் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றிய ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரம்மசக்தி, சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி தலைவர் திருக்கல்யாணி, தாமரைமொழி ஊராட்சி தலைவர் சாந்தா, சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி பேரூராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
- சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் எதிர்ப்பு பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பேரூராட்சி கட்டிடம் 70 ஆண்டுகளுக்கு முன்பு 19.11.1953-ல் திறப்பு விழா கண்டது. இந்த பழைய கட்டிடம் போதிய வசதி இல்லாததாலும், பழைய கட்டிடம் என்பதாலும், சீரணி அரங்கம் பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட கருத்து கேட்டு அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒருமனதாக ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர். அனைத்து கட்சி நிர்வாகிகளிடமும் கையெழுத்தும் பெறப்பட்டது.
2015 ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இதே சீரணி அரங்கம் பகுதி காலி இடத்தில் அம்மா விளையாட்டு அரங்கம் கட்ட தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இதை ஆட்சேபித்து சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது தி.மு.க. நிர்வாகம் சீரணி அரங்கம் பகுதியில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் சீரணி அரங்கை இடித்துவிட்டு புதிய பேரூராட்சி கட்டிடம் கட்டக்கூடாது என்று சிங்கம்புணரி ஒன்றிய பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பாரம்பரியமிக்க சீரணி அரங்கத்தை இடிக்க கூடாது, சீரணி அரங்கை தவிர்த்து மாற்று இடத்தில் புதிய பேரூராட்சி கட்டிடம் கட்ட வேண்டும் என பா.ஜ.க. ஊடகப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பதிவிடப்பட்டன.
மேலும் சீரணி அரங்க திடலை பாதுகாப்போம் என்று சிங்கம்புணரி நகர் பகுதி முழுவதும் சுவரொட்டிகளும், சீரணி அரங்கம் முன் பகுதியில் பேனரும், போஸ்டரும் வைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
இதன் மூலம் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் இருந்தது.
இப்பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருதார்.
அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது ரூ1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.
ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவை தலைவர் நெடுஞ்செழியன், எம்.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் வரவேற்றார் விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்–செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.
ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, தினகர், மங்கை.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் பழனிவேல் நன்றி கூறினார்.
- புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ரூ.11 லட்சம் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.
- பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டி, கல்லம நாயக்கன்பட்டி, புலிப்பாறைப்பட்டி, குண்டாயிருப்பு, வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்டப்பணிகள்
தாயில்பட்டி ஊராட்சி யில் கலைஞர் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தி கீழ் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மயான பணிகளையும், கல்லமநாயக்கன்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.10 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ள நூலக கட்டிடத்தையும் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடு கட்டப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும், புலிப்பாறைப்பட்டி ஊராட்சியில் ஜெ.ஐ.சி.ஏ. திட்டத்தின் கீழ் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை பார்வையிட்டார்.
பின்னர் குண்டா யிருப்பு ஊராட்சி, சுப்பிர மணியபுரத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சேவை மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி இயக்குநர் (தணிக்கை) அரவிந்த், வட்டாட்சியர் ரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ ர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
- கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி, கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.
இதை அறிந்த நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.