search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New inflammation"

    • உத்தரகோசமங்கை அருகே புதிய உப்பளத்தால் கழிவு நீர் ஆனைகுடி கண்மாயில் கலக்கிறது.
    • சுற்றுவட்டார விளை நிலங்கள், கால்நடைகள், நிலத்தடி நீர்பாதிப்படையும் என புகார் மனு கொடுக்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே களரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகுடி பாசன கண்மாய் பகுதிக்குள் புதிதாக அமைக்கப்படும் உப்பளத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இங்கு உப்பளம் அமைத்தால் கழிவு நீர் பாசனக்கண்மாயில் கலக்கும் அபாயம் இருப்பதால் சுற்றுவட்டார விளை நிலங்கள், கால்நடைகள், நிலத்தடி நீர்பாதிப்படையும் என தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாத்திற்கும் புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

    களரி, ஆனைக்குடி, கொடிக்குளம், வெங்குளம், வித்தானுார், பால்க்கரை, மோர்க்குளம், அச்சடிப்பிரம்பு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்களுக்கு, உப்பளம் அமைத்தால் பாதிப்பை சந்திக்க நேரிடும். இப்பகுதியில் நெல், மிளகாய், மல்லி, கேழ்வரகு, பருத்தி உள்ளிட்ட விவசாயம் நடக்கிறது.

    ஆனைகுடி பாசன கண்மாயை நம்பியுள்ள கிராம மக்கள், வருங்காலங்களில் உப்பள கழிவு நீரால் பாதிப்பை சந்திப்பார்கள். நிலத்தடி நீரும் உவர் நீராக மாறும் அபாயம் உள்ளது. இது குறித்து களரி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×