என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Newcomer Run"
- இளம்பெண்ணுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
- திருமணத்துக்காக ஏற்பாடுகளை இளம்பெண்ணின் பெற்றோர் செய்து வந்தனர்.
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண்.
ஐ.டி.ஊழியர். இவருக்கு திருமணம் செய்து வைப்பது என அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்காக ஏற்பாடுகளை இளம்பெண்ணின் பெற்றோர் செய்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் அருகே உள்ள மருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இளம்பெண் வீட்டை விட்டு செல்லும் போது மோதிரம், செயின், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை எடுத்து சென்றது தெரிய வந்தது. இன்னும் 3 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் மாயமானதால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் பீளமேடு ேபாலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
போத்தனூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கு மாணவருடன்மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தனது காதலனுடன் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இது குறித்து அவரது பெற்றோர் போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.