என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nomination"

    • அரசாணை 152 ஐ திரும்ப பெற வேண்டும்.
    • அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலக வாயில் முன்பு மாநகராட்சி நகராட்சி ஊழியர்கள், ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்க மாநில பொருளாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், சி மற்றும் டி பிரிவு உழியர்களுக்கான அரசு பணிகளை உருவாக்கவும் பதவி உயர்வு மற்றும் மாநகராட்சி நகராட்சி அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர்கள்-உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கான 5 நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    அதன் விவரம் வரு மாறு:-

    * உணவு மற்றும் மேலாண்மைக்குழு தலைவர்-மச்சராஜா, உறுப்பினர்கள்- நர்மதா, நாகராஜன், வேல்ராணி (எ) உமா லட்சுமி.

    * தொழில் மற்றும் தொழிலாளர் குழு தலைவர்-பாரதிதாசன், உறுப்பினர்கள்-சிவக்குமார், தமிழ்வாணன், மகாலட்சுமி.

    * பொதுப்பணிக்குழு தலைவர்-வேல்முருகன், உறுப்பி னர்கள்-மகா லட்சுமி, கண்ணன், புவனா.

    * கல்விக்குழு தலைவர்-சுபாசினி, உறுப்பினர்கள்-பாலச்சந்தர், பகவதி, மாலதி

    இந்த 4 குழுக்களுக்கும் பதவி வழி உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * மதுவிலக்கு உள்ளடங்கல் மற்றும் மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு தலைவர்- வசந்தி (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்), உறுப்பினர்கள்-இந்திரா, முத்துச்செல்வி, போஸ், பாரதிதாசன்.

    • மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி நடந்தது.

    மதுரை

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    மதுரை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர்களாக மூவேந்திரன், கண்ணன், கோசா பெருமாள், துணை தலைவர்களாக கோவிந்தமூர்த்தி, செல்வி, அரிச்சந்திரன், முத்துச்செல்வம், மஞ்சுளா, குப்பு, அனந்தஜெயம், மாவட்ட செயலாளர்களாக ஹரிகரபுத்திரன், சீதா, சித்ராதேவி, பொருளாளராக முத்துராம், அலுவலக செயலாளராக ஹரிகிரு ஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவராக சுரேஷ், விவசாய அணி மாவட்ட தலைவராக பூமி ராஜன், பட்டியல் அணி மாவட்ட தலைவராக வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • 10 ரூபாய் நாணயங்களோடு தயார்
    • பொது வேட்பா–ளராக அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டுகோள்

    திருச்சி,

    திருச்சி உறையூர் பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் (வயது 61). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவா். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது ராஜேந்திரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய் தார். ஆனால், அப்போது அவரது வேட்பு மனு பரி–சீலனையின்போது தள்ளு–படி செய்யப்பட்டது.தேர்தல் மன்னன் பத்ம–ராஜன் போல், இவரும் விழிப்புணர்வுக்காக பல் வேறு தேர்தல்களில் போட் டியிட மனு செய்து வருகி–றார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டி–யிட முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த வாரம் மனு தாக்கல் செய்வதற்காக சென்றபோது அவரது மனு ஏற்கப்படவில்லை.இதுகுறித்து அவா் திருச் சியில் நிருபர்களிடம் கூறி–யதாவது:-தமிழ்நாடு அரசுப் போக் குவரத்து கழகத்தில் பணி–புரியும் பேருந்து நடத்து–நா்கள் வசூல் செய்து கொண்டு வரும் பேருந்து கட்டணத்தில் பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக் கள் பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனா். பல இடங்களில் வங்கிகள் கூட நாணயங்களை பெற்றுக் கொள்வதில்லை. வியாபாரிகளும் பெரும்பா–லான நேரங்களில் இந்த நாணயங்களை புறக்கணித்து வருகின்றனா்.10 ரூபாய் நாணயம் செல்லும், அதனை புறக்க–ணிக்கக் கூடாது என ரிசா்வ் வங்கி தரப்பில் அவ்வப்போது அறிவிப்பு–களும் வெளியிடப்படுகிறது. ஆனால், யாரும் அதனை பின்பற்றுவதில்லை. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட விருப்ப மனு–வுடன், டெபாசிட் தொகை–யாக 10 ரூபாய் நாணயங்க–ளுடன் சென்றேன். ஆனால், எனது மனுவை ஏற்க–வில்லை.டெபாசிட் தொகைக்கு நாணயங்களை மட்டுமே வழங்க இருக்கிறேன். ஏனெ–னில், 10 ரூபாய் செல்லுமா? செல்லாதா? என இடைத் தோ்தல் களத்தின் மூலம் அனைவருக்கும் அறிவிக்க உள்ளேன். எனவே, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். அனைத்தும் சரியாக இருந்தும் எனது வேட்பு மனுவையும், டெபாசிட் தொகையையும் நிராகரித்தால் மக்கள் மன்றத்தில் அரசும், தோ்தல் ஆணையமும் பதில் அளிக்க வேண்டும்.மேலும், தோ்தல் விதி–முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நல்ல மனிதா்கள் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மக்களிடம் பிரசாரம் செய்யப் போகிறேன். என்னை பொது வேட்பா–ளராக அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி–னார்.

    • விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தி.மு.க. நெசவாளரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாவட்டத்திற்கு தலைவராக வீரசோழனை சேர்்ந்த சவரிமுத்து, துணைத்தலைவராக கீழஉப்பிலிக்குண்டு ராமர், அமைப்பாளராக கல்குறிச்சி கடம்பவனம் துணை அமைப்பாளர்களாக பூலாங்கால் மைதின் அப்துல்காதர், குலசேகரநல்லூர் முத்துராமலிங்கம், சிவகாசி அன்பு முருகன், பொட்டகாசியேந்தல் பிச்சைமணி, மல்லாங்கிணறு ரங்கசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தெற்கு மாவட்டத்திற்கு தலைவராக சுந்தரபாண்டியம் பகுதிைய சேர்ந்த சடையாண்டி, துணைத்தலைவராக சமுத்திராபுரம் ஆனந்தா முருகன், அமைப்பாளராக அருப்புக்கோட்டை திருநகரம் அண்ணாதுரை, துணை அமைப்பாளர்களாக சங்கரபாண்டியாபுரம் பாலசுப்பிர மணியன், குருநமசிவாயம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆறுமுகம், கோவிந்தராஜ், ராஜபாளையம் ராஜேந்திரகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் நியமனம் செய்யப்பட்டார்.
    • அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் நகராட்சி 31-வது வார்டு கவுன்சிலர் எம்.முகம்மது ஜஹாங்கீர். முதுகலை பட்டதாரியான இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து கவுன்சிலர் முகம்மது ஜஹாங்கீர் கூறிய தாவது:-

    தமிழக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநில ஹஜ் கமிட்டி உறுப்பி னராக என்னை நியமனம் செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக் கும், நான் சார்ந்துள்ள தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி தொடர்பு டைய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இதற்காக பரிந்துரைத்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினராக பதவி ஏற்றவு டன் மாநில அளவில் ஹஜ் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்துதர பாடு படுவேன். இந்தியாவில் முன்மாதிரியான திராவிட மாடல் அரசை நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், சிறுபான்மையினரின் நலனை பேண அவரது உரிமைகளை காக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    ஹஜ் பயணிகள் சிரமம் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள சலுகைகளை செய்து வருகிறார். மத்திய அரசு ஹஜ் மானியத்தை ரத்து செய்தாலும் நமது தமிழக அரசு மானியத்தை வழங்கி வருகிறது. இதனால் பல ஏழை முஸ்லிம்களின் ஹஜ் பயண கனவை தி.மு.க. அரசு நிறைவேற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது

    சிறுபான்மையினர் நலனுக்காக இன்னும் பல திட்டங்களை கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அனைத்து தரப்பினரும் முன்னேற்றம் அடையும் வகையில் மதசார்பற்ற சமூக நல்லிணக்கமான சமத்துவ ஆட்சியை அவர் தந்து கொண்டிருக்கிறார். அதேபோல் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்த 31-வது வார்டு மக்களின் கோரிக்ககைளையும் முழு வதுமாக நிறைவேற்ற நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் மற்றும் நகராட்சி பணியா ளர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

    குறுகிய காலத்திற்குள் ரேசன் கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற நகர்மன்றத்தில் வலியுறுத்தி வருகிறேன். எனது மக்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் என வார்டை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளை ஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.ம.மு.க. தெற்கு மாவட்டசெயலாளராக டேவிட் அண்ணாத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்‌.

    மதுரை

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. செய லாளராக டேவிட் அண்ணா துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்த மகேந்திரன் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.

    அ.தி.மு.க.விற்கு மகேந்திரன் தாவியதை அடுத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. புதிய செயலாளராக கா.டேவிட் அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் என்பது குறிப் பிடத்தக்கது.

    இவர் அ.ம.மு.க. வில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

    புதிய மாவட்ட செய லாளராக டேவிட் அண்ணா துரையை நியமித்து கட்சியின் பொதுச் செயலா ளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட த்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 சட்டசபை தொகுதி கள் வருகின்றன.

    எனவே புதிய மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டேவிட் அண்ணாதுரைக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்து ழைப்பை நல்கிட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக சரவணன் நியமிக்கப்பட் டுள்ளார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தில் மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • மாநகர் மாவட்ட பொருளாளர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜிடம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் லால்ஜி தேசாய் உத்தரவுப்படி தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு கடிதத்தை சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன், மாநகர் மாவட்ட பொருளாளர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜிடம் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.
    • பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் பாட்ஷா படத்தில் வில்லனாக நடித்தது மிகவும் பேசப்பட்டது.

    நடிகர் தேவன் கேரள மக்கள் கட்சி என்ற பேரில் 2004-ல் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    இந்நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலை வராக நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் தேவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27ந்தேதி ஆகும்.
    • 28ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.

    திருச்சி:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.

    திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் திருச்சி உதவி கலெக்டர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களிடம் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட முதல் நபராக ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து வந்தார்.

    அதன் பின்னர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண் மனு தாக்கல் செய்தார். இதையொட்டி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 27ந்தேதி ஆகும். 28ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 30 ந்தேதி மாலை 3 மணிக்குள் வேட்பாளர் மனுவை திரும்ப பெறலாம்.

    • அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
    • வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வருகிற 27-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

    எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அ.தி.மு.க.வின் வழக்க மாகும். ஜெயலலிதா, தான் தொடங்கும் அனைத்து செயல்களையுமே நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே தொடங்கி அதில் வெற்றியையும் கண்டிருக்கிறார்.

    இப்போது அவரது வழியை பின்பற்றியே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நாளை நல்ல நேரம் பார்த்து வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கியது போக மீதமுள்ள 32 இடங்கள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஆகியவற்றில் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் இறங்குகிறார்கள்.

    இவர்கள் அனைவரும் திருச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். பின்னர் அனைவரும் நாளை தங்களது தொகுதிகளுக்கு சென்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். நாளை மதியம் 12 மணி முதல் 1 மணிவரை புதன் ஓரையாகும்.

    அந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்கிறார்கள். முன்னதாக நாளை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கிவிட்டு வேட்பு மனுக்களில் கையெழுத்து போடவும் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி மேற் கொண்டிருந்த இந்த ஜோதிட நம்பிக்கை அரசியலில் அவருக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது.
    • வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    நெல்லை:

    ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார்.

    இதனை தொடர்ந்து அவரது பெயரை போலவே பன்னீர்செல்வம் என பெயர்கொண்ட 4 பேர் சுயேட்சையாக அந்த தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அதே போன்று சம்பவம் தென்காசி பாராளுமன்ற தொகுதியிலும் நடந்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அதன் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிடுகிறார்.

    இதனையொட்டி அவர் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் அவரது பெயரை போலவே பெயர் கொண்ட மேலும் 4 பேர் நேற்று சுயேட்சைகளாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியை தவிர்த்து, கேசவபுரம் கடஞ்சிகுளத்தை சேர்ந்த பா.கிருஷ்ணசாமி, சிவகிரி விஸ்வநாதபேரி காந்தி காலனியை சேர்ந்த மூ.கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கரிவலம் வந்த நல்லூரை சேர்ந்த க.கிருஷ்ணசாமி, சிதம்பராபுரம் மலையன்குளம் பகுதியை சேர்ந்த வெ.கிருஷ்ணசாமி (45) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் ஒரே நாளில் கிருஷ்ணசாமி என்ற ஒரே பெயரை கொண்ட 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    ×