என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Northstate Youth Dead"
- விபத்து குறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
திருவொற்றியூர்:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 19). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவொற்றியூர் பெரியார் நகரில் தங்கி எல்லையம்மன் கோவில் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் மணலியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகர பஸ்சை (56டி) இடது புறமாக முந்தி செல்ல முயன்றார். அப்போது சாலையோரத்தில் சென்ற சரக்கு ஏற்றி செல்லும் சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் நிலை தடுமாறிய ரகு மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த மாநகர பஸ்சின் சக்கரத்தில் அவர் சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூகவலை தளத்தில் பரவி வருகிறது.