search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "northstate youths"

    • காலை நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்று கொண்டு தனது வேலையை தேர்ந்தெடுப்பார்கள்.
    • கரும்புக்கடை பகுதியானது ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பகுதியாகும்.

    குனியமுத்தூர்

    கோவை மாநகரில் அன்றாடம் தினக்கூலி வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

    கோவையின் பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் ஆங்காங்கே கூட்டமாக நின்று கொண்டு தனது வேலையை தேர்ந்தெடுப்பார்கள்.

    குறிப்பாக கோவையில் சுந்தராபுரம், கரும்புக்கடை, துடியலூர், கணபதி மோர் மார்க்கெட் பகுதிகளில் கூட்டமாக நின்று கொண்டிருப்பார்கள்.

    கோவை கரும்பு கடை ஜங்ஷனில் தினமும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9.30 மணி வரை காத்திருப்பார்கள்.

    கரும்புக்கடை பகுதியானது ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பகுதியாகும். அப்படிப்பட்ட இடத்தில் 300-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் காலை நேரத்தில் நிற்கும்போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    காலை 8 மணி முதல் 9 மணி வரையில் கல்லூரி வாகனம் மற்றும் பள்ளி வாகனம் அதிகமாக இங்கு இயங்கி கொண்டிருக்கும். இதனால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்போது இவர்கள் குறுக்கும் நெடுக்குமாக சுற்றித் திரியும் போது வாகன நெரிசல் மேலும் கூடுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது:-

    சாதாரணமாக எப்போதுமே இப்பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்த வாலிபர்கள் கூடி இருப்பது போக்குவரத்துக்கு மிகவும் தடையாக உள்ளது.

    குறிப்பாக இப்பகுதியில் நின்று கொண்டிருக்கும் தொழிலாளர்களில், 90 சதவீதம் வடமாநில வாலிபர்கள் நிற்கிறார்கள். வேலைக்கு அழைத்து ெசல்பவர்கள் அந்த இடத்தை மாற்றினால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    உக்கடம் மேம்பால பணி நடைபெற்று வருவதால் மேம்பாலத்துக்கு அடியில் இடம் நிறைய உள்ளது. அப்பகுதியில் இந்த தொழிலாளர்களை நிறுத்தி னால், கொத்தனார்கள் மற்றும் வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படும் பட்சத்தில், தேவைப்படுவோர் தினக்கூலி வேலை யாட்களை அழைத்துக் கொண்டு செல்லும் போது, போக்குவரத்துக்கு தடை இருக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து அந்த வார்டு கவுன்சிலர் கபீர் இடம் கேட்ட போது, கண்டிப்பாக இதற்கு முடிவு செய்வோம். அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி போக்குவரத்துக்கு இடையூறு நேராதவாறு ஏற்படுத்துவோம் என்றார்.

    திருப்பூரில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையத்தில் குடியிருந்து வரும் தம்பதியினர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பனியன் ஆர்டர் அதிகமாக இருந்ததால் கணவன் -மனைவி இரவு வேலைக்கு சென்று விட்டனர்.

    நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் சிறுமியின் தந்தை மட்டும் பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது இரு மகள்களும் தூங்கி கொண்டிருந்தனர்.

    அதிகாலை 2 மணிக்கு மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் வீட்டு கதவை லேசாக திறந்து வைத்து விட்டு தந்தை தூங்க சென்றார். அதிகாலை 3 மணிக்கு 2-வது மாடியில் இருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மாடிக்கு சென்று பார்த்த போது 4 வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. சிறுமியின் ஆடை கலைந்திருந்தது.

    கை, கால் மற்றும் உடலில் ரத்த காயங்கள் இருந்தது. வீடு புகுந்த மர்ம நபர்கள் சிறுமியின் வாயை பொத்தி மாடிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை. போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருப்பூர் போயம்பாளையம் பஸ் நிறுத்தம் நால் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை. தொடர்ந்து மறியல் செய்தனர்.

    அங்கு பதட்டம் நீடித்ததால் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாநகர துணை கமி‌ஷனர் உமா, உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் அங்கு வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சிறுமியை பலாத்காரம் செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் இரவு 10.30 மணிக்குதான் முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 வட மாநில வாலிபர்கள் உள்பட 3 பேரிடம் அனுப்பர்பாளையம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தினார்கள். சிறுமி என்பதால் அவரால் சரியான முறையில் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    4 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×