search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notification notice"

    • தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
    • இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது.

    மங்கலம்பேட்டை, நவ.24-

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில், விருத்தாசலம்-உளுந்தூ ர்பேட்டை மெயின் ரோடு (எஸ்.எச்.69 மாநில நெடு ஞ்சாலை) மற்றும் கடை வீதியில் 100-க்கும் மேற்ப ட்ட வீடு மற்றும் கடைகள் உள்ளன. இவற்றிற்கு முன்புற பகுதிளில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டி ருப்பதாகவும், இங்குள்ள கடை மற்றும் வணிக நிறுவ னங்களின் முன்புற பகுதி களில் தகர ஷீட்டு களால் ஷெட்டுகள், கொட்ட கைகள் அமைத்து பலர் ஆக்கிரமிப்பு செய்திரு ப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உரிய நேரத்திற்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், மங்கல ம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், விருத்தா சலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுலகம் சார்பில், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை-விழுப்புரம் சாலையில், மங்கலம்பேட்டை மாநில நெடுஞ்சாலை எண்:69-ல், 13/4 முதல் 16/6 கி.மீ., வரை உள்ள ஆக்கிரமிப்பினை தாங்களாகவே முன்வந்து 15.11.2022 அன்று மாலை 6 மணிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலைத் துறை மூலம் 16.11.2022 காலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இதனால் ஏற்படும் எவ்விதமான இழப்பீடுகளுக்கும் நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என்று கூறப்பட்டிருந்தது. இதனால், கடை மற்றும் வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த தகர ஷீட் ஷெட்டுகள் மற்றும் கொட்டகைகளை பலர் தாங்களாகவே முன் வந்து அகற்றிக் கொண்டனர்.

    இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை கடலூர் கோட்டப் பொறியாளர் பரந்தாமன் உத்தரவின்பேரில், விரு த்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அறிவு க்களஞ்சியம், அப்போது, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் விவேகானந்தன், சாலை ஆய்வாளர்கள் அருணகிரி, விமலாராணி, ராணி ஆகியோர் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று காலை மங்கலம்பேட்டை மெயின் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணியி னை மேற்கொண்டனர். இந்தப் பணியின்போது, மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×