search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nursingh student"

    ஆசை வார்த்தை கூறி நர்சிங் மாணவியை காதலித்து ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஏ.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் கார்த்திகா (வயது 19). நர்சிங் மாணவியான இவர், சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தங்கம் என்பவரின் மகன் கார்த்திக்கும் (27) காதலித்தோம். அவர் திருமணம் செய்வதாக கூறி என்னுடன் நெருங்கி பழகினார். இதில் நான் கர்ப்பமானேன்.

    இதைத்தொடர்ந்து கார்த்திக்கை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். கார்த்திக் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×