என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Observations"
- மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
- தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
கடலூர்:
பண்ருட்டியில் இருந்து சேந்த நாடு செல்லும் அரசு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட மாணவர்களை குறித்து சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செட்டிபாளையம், தட்டாஞ்சாவடி பகுதி சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிபடி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, யாராவது பஸ்சில் தொங்கியபடி சென்றால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடமும், பஸ் டிரைவர், கண்டக்டரிடமும் அதிகாரிகள் தெரிவித்தனர்.