search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupied shops remove"

    திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #TiruttaniTemple
    பள்ளிப்பட்டு:

    திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா நடக்கிறது. 3-ந் தேதி அஸ்வினியும், 4-ந்தேதி பரணியும், 5-ந்தேதி ஆடிக் கிருத்திகை விழாவும் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதைதொடர்ந்து 5-ந்தேதிமுதல் 7-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ஆடிக்கிருத்திகை விழாவுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் சரவண பொய்கை குளத்தில் இருந்து படிக்கட்டு வழியாக கோவிலுக்கு செல்லும் பகுதியில் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்பால் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவில் பகுதியில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். #TiruttaniTemple
    ×