search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ohio"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பலர் உறங்கி விட்டனர்
    • தற்போது வரை அப்பெண்ணால் சரி வர பயமின்றி உறங்க முடியவில்லை

    கடந்த 2020 பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் ஓஹியோ (Ohio) மாநில க்ளீவ்லேண்டு (Cleveland) நகரிலிருந்து கலிபோர்னியா (California) மாநில லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகருக்கு ஒரு பெண் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    மூவர் அடுத்தடுத்து அமரும் இருக்கைகளில் நடுவில் உள்ள இருக்கை அவருக்கு ஒதுக்கப்பட்டதால், அதில் அமர்ந்து வந்த அவர் பயணத்திற்கு இடையே உறங்கி விட்டார். சுமார் 5 மணி நேர பயணம் என்பதால் பல பயணிகள் உறங்கி கொண்டிருந்தனர். மேலும், விமானத்தில் இருக்கைகளின் முதுகுப்பகுதி உயரமாக வடிவமைக்கப்படுவதால் முன் வரிசையிலோ பின் வரிசையிலோ என்ன நடக்கிறது என்பது சக பயணிகளுக்கு தெரிவதில்லை.

    அப்பெண்ணிற்கு அடுத்த இருக்கையில், 50 வயதான மொஹம்மத் ஜாவத் அன்சாரி என்பவர் அமர்ந்திருந்தார். அப்பெண் ஆழ்ந்து உறங்குவதை கண்ட அன்சாரி, அப்பெண்ணின் ஆடைகளின் வழியாக அவரது கால்களின் மேற்பகுதியை தொட்டு தகாத செயல்களில் ஈடுபட்டார்.

    உடனடியாக விழித்து கொண்ட அப்பெண் ஆடைகளை சரி செய்து கொண்டு, அன்சாரியின் கையை தள்ளி விட்டு, அந்த இருக்கையில் இருந்து வேறு இடத்திற்கு மாறி சென்றார். மேலும், இது குறித்து உடனே விமான ஊழியர்களிடம் புகாரளித்தார்.

    விமானம் தரையிறங்கியதும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    இந்த அத்துமீறலால் அப்பெண் அதிர்ச்சியடைந்து பயந்து விட்டார். அந்த விமான பயணம் முழுவதும் அவர் அழுது கொண்டே வந்தார். இதனை பயணத்தில் இருந்த பல பயணிகள் நேரில் கண்டு சாட்சியமும் அளித்தனர். அன்சாரியின் இந்த செயலால் தற்போது வரை அந்த பெண்ணிற்கு சரிவர உறங்க முடியவில்லை.

    ஆனால், அன்சாரி, இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்சாரிக்கு சுமார் ரூ. 35 லட்சம் ($40,000) அபராதமும், 21 மாத சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

    • ஸ்பீக்மேன் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என காவல்துறை அறிவிப்பு
    • ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார் என காவலர் நலச்சங்கம் அறிவிப்பு.

    அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலமான ஒஹியோவின் சர்க்கிள்வில் நகரத்தில் நெடுஞ்சாலையில், ஒரு கறுப்பினத்தவர் மீது தனது நாயை கட்டவிழ்த்துவிட்ட காவல் அதிகாரியை காவல்துறை பணிநீக்கம் செய்துள்ளது.

    அந்த அதிகாரியின் பெயர் ரையான் ஸ்பீக்மேன்.

    "காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் தரநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ரையான் ஸ்பீக்மேன் பூர்த்தி செய்யவில்லை. அதனால் அவர் இத்துறையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    "ஸ்பீக்மேன் நியாயமான காரணங்களின்றி நீக்கப்பட்டிருக்கிறார். அவர் சார்பாக குறைகேட்பு மனு ஒன்றை நாங்கள் தாக்கல் செய்வோம்" என காவலர் நலச்சங்கம் கூறியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து காவல்துறையின் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு, ஒரு அறிக்கையையும், வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில், "ஜூலை 4ல், 23 வயதான ஜடேர்ரியஸ் ரோஸ் என்பவர் டிராக்டர் டிரெய்லர் வாகனம் ஒன்றை ஓட்டி சென்றுள்ளார். சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை நிறுத்தும்படி கை காட்டி உள்ளனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது.

    கொலம்பஸ் பகுதியிலிருந்து தெற்கே 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் அதிகாரிகள் "ஸ்டாப் ஸ்டிக்ஸ்" எனப்படும் டயரின் காற்றை குறைத்து விடும் சாதனங்களை பயன்படுத்தி அவ்வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    அவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் காணப்படுவதாவது:

    போலீஸ் அதிகாரிகள் ரோஸை வாகனத்தில் இருந்து இறங்க உத்தரவிட்டதால், ரோஸ் தனது கைகளை உயர்த்தி வாகனத்தின் அருகே நின்று கொண்டிருக்கிறார். "நாயை விடுவிக்க வேண்டாம்" என்று ஒரு உள்ளூர் அதிகாரி கூறியதையும் மீறி சர்க்கிள்வில் காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன், காவல்துறை நாய் ஒன்றை ரோஸ் மீது கட்டவிழ்த்துவிடுகிறார். முழங்காலிட்டிருக்கும் ரோஸை நோக்கி ஓடும் அந்த நாய், அவரை கடித்து இழுக்கிறது. "தயவுசெய்து நாயை விலக்குங்கள்" என ரோஸ் அலறுகிறார்.

    இக்காட்சிகள் அந்த வீடியோவில் தெரிகின்றன.

    இதனை கண்ட பலரும் கொந்தளித்து தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

    ரோஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், காவல்துறை அதிகாரி ஸ்பீக்மேன் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஷான் பாயர் ஆகியோரை பணிநீக்கம் செய்யுமாறும் முகநூலில் ஆர்வலர்கள் கோரினர்.

    இந்நிலையில் ஸ்பீக்மேனின் பணிநீக்க அறிவிப்பு வந்துள்ளது.

    அமெரிக்காவில் டிரைவராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Sikhkilled
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தின் மான்ரோ பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் வாழ்ந்து வந்துள்ளார், இவர் அப்பகுதியில் சரக்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், மே 12-ம் தேதி புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் என்ற வாலிபர் இவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ராபர்ட் வைத்திருந்த துப்பாக்கியால் சுடப்பட்ட ஜஸ்பிரீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரீத் சிங், சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் மீது கொடூரமான கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. #Sikhkilled
    ×