search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "On Strike"

    • தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
    • விவசாயிகள் பலரும் நெல்லுக்கு மாற்று பயிராக பொங்கல் கரும்பை பயிரிட்டனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியான பேரையூர், கருவாக்குறிச்சி, காஞ்சி குடிக்காடு, மேலவாசல், காரிகோட்டை, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு பயிடப்பட்டிருந்தது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெள்ளம்,முழு கரும்பு ஒன்றும் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தி.மு.க. ஆட்சியிலும் கடந்த ஆண்டும் பொங்கல் கரும்பு வழங்கப்பட்டது. இதனால் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பலரும் நெல்லுக்கு மாற்று பயிராக பொங்கல் கரும்பை பயிரிட்டனர்.

    ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி காலவாய் கரை பகுதியில் தஞ்சை - மன்னார்குடி சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் மன்னார்குடி- தஞ்சை சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மன்னார்குடி போலீசார் பேச்சு வார்த்தையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×