என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "onam festival"

    • காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலம் பாதித்து கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி புதுப்பள்ளி வேட்பாளரை அறிவித்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மற்ற கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இடைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோட்டயம், மணற்காடு தேவாலயங்களில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

    புதுப்பள்ளிக்கு விரைவாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை, அய்யன்காளி-ஸ்ரீநாாயணகுரு ஜெயந்தி, மணற்காடு பெருநாள் போன்ற கொண்டாட்டங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இடதுசாரி ஜனநாயக முன்னனியின் தொகுதி பொறுப்பாளரும், கேரள மந்திரியுமான வி.என். வாசவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் புதுப்பள்ளி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலுயுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும்.
    • கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில லாட்டரி துறையின் சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு முக்கிய பண்டிகை காலங்களில் அதிக பரிசுதொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

    அதன்படி கேரளாவில் பிரசித்தி பெற்ற திருவோணம் பண்டிகையை முன்னிட்டு பம்பர் குலுக்கல் லாட்டரி சீட்டு விற்பனை கடந்த 27-ந் தேதி மாநிலத்தில் தொடங்கியது. முதல் பரிசாக ரூ.25 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்ட இந்த லாட்டரி சீட்டின் விலை ரூ.500 ஆகும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதி குலுக்கல் நடக்கிறது.

    நாட்டிலேயே இதுதான் அதிகபட்ச பரிசுத் தொகை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விற்பனை தொடங்கிய நாளில் இருந்து கடந்த 15-ந் தேதி வரை 20 லட்சத்து 50 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகி உள்ளது. டிக்கெட் விற்பனையில் பாலக்காடு மாவட்டம் முதலிடத்திலும் திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் 12 லட்சத்து 83 ஆயிரம் சீட்டுகள் தான் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி லாட்டரி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 30 லட்சம் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமாக 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட அனுமதி உள்ளது. முதல் பரிசு பெறுபவர் 30 சதவீத வருமானவரிக்கு பிறகு சுமார் ரூ.17.5 கோடியை பெறுவார் என்றார்.

    • இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது.
    • திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணாவணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்தே காணப்பட்டது. இன்று ஆவணி மாதப்பிறப்பையொட்டி அதிகளவு பூக்கள் வரத்து இருந்தது. 40 டன் பூக்கள் வந்தநிலையில் வாடாமல்லி மட்டும் 30 டன் வந்துள்ளது. கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கேரள மக்கள் அத்தப்பூ கோலம் போட்டு விருந்தினர்களை வரவேற்பார்கள். இதற்காக 9 நாட்கள் அத்தப்பூ கோலம் போடப்படுகிறது. இதில் வாடாமல்லி பூ முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்று திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு அதிகளவு வாடாமல்லி வந்த நிலையில் விலை ஒரு கிலோ ரூ.15லிருந்து ரூ.30ஆக உயர்ந்தது. இருந்தபோதும் அதிகளவு பூக்கள் லாரி மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மல்லிகை ஒரு கிலோ ரூ.600, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.200, செண்டுமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.150, ரோஸ் ரூ.150 என்ற விலையில் விற்பனையானது.

    அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழாக்கள் வர உள்ளதால் பூக்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 23ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிப்பு.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்தினை முன்னிட்டு 29.08.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

    29.08.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் திங்கள் நான்காவது சனிக்கிழமை (23.09.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகை தினத்திற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881-ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 29.08.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம்.
    • அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    மூணாறு:

    கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இடுக்கி அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது.

    ஆண்டுதோறும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் இந்த 2 அணைகளையும் சுற்றுலா பயணிகள் பாா்வையிட அரசு சார்பில் அனுமதி வழங்கப்படும். இதனால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட்டு செல்வார்கள். அதன்படி, இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதில் வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அணையை பார்வையிட நுழைவுக் கட்டணமாக முதியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூல் செய்யப்படுகிறது. அணையின் உள்ளே சுற்றுலா பயணிகள் செல்போன், கேமரா ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். வாரத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட முடியாது. வயது முதிர்ந்தோர் அணையை சுற்றி பார்க்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்ய ரூ.600 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.
    • சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஓணம் பண்டிகை வரும் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதை அடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், பெருமளவு விமானங்களில், கேரளாவுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

    இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதையடுத்து விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.

    சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19,089 வரை.

    சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,962. தற்போதைய கட்டணம் ரூ. 6,500 முதல் ரூ.10,243 வரை.

    சென்னை-கோழிக் கோடு, வழக்கமான கட்டணம்-ரூ.3,148.

    ஆனாலும் பயணிகள் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திரு–மங் கலம் அருகே ஆலம்பட் டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூ–ரியில் ஓட்டல் மேலாண்மை, பி.பி.ஏ., ஏவியேசன், ஆஸ்பி–டல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. போன்ற பட்ட படிப்பு–களில் கேரள மாநிலம் மற் றும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

    வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதை முன்னிட்டு கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனை–யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் ஓணம் பண் டிகை கல்லூரி வளாகத் தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பங் கேற்ற அத்தப்பூ கோலப் போட்டி மற்றும் விளை–யாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. பின்னர் கேரள மாணவிகள் பங்கேற்ற திரு–வாதிரகாளி கேரள நடனம் மற்றும் பரத நாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், பண்டிகை கொண்டாட்டங்கள் பல் வேறு மக்களின் கலாச்சா–ரம் மற்றும் பண்பாட்டை உணரச் செய்யும் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது இந்திய திரு–நாட்டில் ஒவ்வொரு பகுதி–களிலும் வெவ்வேறு வித–மான கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என் றும்,

    கேரள மாநிலத்தில் வசிக் கும் அனைத்து மக்களும் தங்களுடைய மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றாக கொண்டாட கூடிய பண்டி–கையாக ஓணம் பண்டிகை அமைந்துள்ளது என்றார்.

    பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக–ளுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாக மேலாண்மை துறை–யைச் சார்ந்த டாக்டர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், மனிதவள நிர்வாகி முகமது பாசில் உள்ளிட்டோரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரி–வித்து பேசினர்.

    விளையாட்டுப் போட்டி–களை பேராசிரியர்கள் வினிஷ்மா, பிரசில்லா, ஜெயஸ்ரீ, மேகலா, ஆர்த்தி, முத்துக்குமார், சுபாஷ் ஆகி–யோரும், கலை நிகழ்ச்சிகளை பேராசிரியர்கள் அன்புச் செல்வி, சீமாட்டி, மணிமே–கலை ஆகியோரும் அத்தப்பூ கோலப் போட்டிகளை பேராசிரியர்கள் நளாயினி, சுபஸ்ரீ ஆகியோரும், பேராசி–ரியர்கள் ராஜ்குமார், கார்த் திகா மற்றும் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. மாணவி திவ்யநாயகி ஆகியோர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கி–ணைப்பும் செய்தனர்.

    ஏவியேசன் துறை தலைவி டாக்டர் கார்த்திகா, பேராசிரியர்கள் சசிகலா மற்றும் ஜிஞ்சு மரியம் இமானுவேல் ஆகியோர் விருந்தினர்களை கவுரவித் தனர். இந்த விழாவில் 150-க்கும் மேற்பட்ட பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    கேரளாவில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    கேரளாவிற்கு அதிகளவு காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படுவது வழக்கம். மார்க்கெட்டில் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இன்று ஓணம் பண்டிகைக்காக மார்க்கெட் செயல்பட்டது.

    இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள் அதிகளவு கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

    இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன. வழக்கமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 70 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும். இன்று 300 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டது.

    சேம்பைகிழங்கு கிலோ ரூ.25, பீட்ரூட் ரூ.10, கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.20, புடலங்காய் ரூ.12, வெண்டை ரூ.20, பாகற்காய் ரூ.18, சுரக்காய் ரூ.7 முதல் ரூ.15, பூசணிக்காய் ரூ.7, அவரை ரூ.35 முதல் ரூ.55, கொத்தவரை ரூ.18, மரமுருங்கை ரூ.9, கரும்பு முருங்கை ரூ.10, பச்சை மிளகாய் ரூ.32, பல்லாரி ரூ.18, சின்னவெங்காயம் ரூ.35 முதல் ரூ.50, தக்காளி ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.500 என கொள்முதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தக்காளி ஒரு பெட்டி ரூ.300 வரையிலேயே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இன்று தேவை அதிகரிப்பின் காரணமாக ரூ.500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் விடுமுறை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் அதிகளவு காய்கறிகளை கொண்டு வந்தனர்.

    • கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.
    • இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    நெல்லை:

    கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நாளில் கேரளாவில் பெண்கள் தங்களது வீடு முன்பு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். இதற்காக தமிழகத்தில் குமரி மாவட்டம் தோவாளை, நெல்லை சந்திப்பு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் இருந்து அதிகளவு பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை தமிழகத்தில் கல்லூரிகளில் படிக்கும் கேரளா மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் கொண்டாடுவார்கள்.

    இதனையொட்டி நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.500 வரை விற்பனையானது.

    அதே விலையிலேயே பிச்சிப்பூ விற்பனையானது. அதேநேரத்தில் பூக்களை வாங்கி கொண்டு தெருக்களில் சென்று விற்கும் வியாபாரிகள் ரூ.600 வரை விற்றனர்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ ரூ.600-க்கு விலை போனது. இதேபோல் சம்பங்கி மற்றும் ரோஜா பூக்கள் கிலோ தலா ரூ.200-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து நெல்லை சந்திப்பு பூக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது பூக்கள் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டும் நாளை மறுநாள் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி நாளை பூக்கள் விலை அதிகரிக்கும்.

    கடந்த 2 நாட்களாக சுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை மற்றும் பிச்சி பூக்கள் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.500 வரை விற்பனையாகி உள்ளது. நாளை அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

    • செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ெரயில் (எண்: 07119) இயக்கப்படுகிறது.
    • தாம்பரம் - மங்களூரு ரெயில் (எண்: 06049) 2-ந் தேதி இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    வருகிற 29ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ெரயில் (எண்: 07119) இயக்கப்படுகிறது.

    இன்று 27ந்தேதி கொல்லத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ெரயில் (எண்: 07120) மறுநாள் இரவு 11:50 மணிக்கு செகந்திரபாத் சென்றடையும். திருப்பூருக்கு அதிகாலை 3:15 மணிக்கு வரும்.

    தாம்பரம் - மங்களூரு ெரயில் (எண்: 06049) 2-ந் தேதி இயக்கப்படுகிறது. மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் காலை 9:30 மணிக்கு மங்களூரு சென்று சேரும். திருப்பூரை இரவு 11:28 மணிக்கு கடந்து செல்லும்.மறுமார்க்கமாக மங்களூரு - தாம்பரம் ெரயில் (எண்: 06050) 3-ந் தேதி இயங்கும்.இரவு 11 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் மதியம் 3:15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    திருப்பூரில் இந்த ெரயில் காலை 7:13 மணிக்கு நின்று செல்லும் என அறிவிக்கபட்டுள்ளது. 

    • ஓணம் பண்டிகையின்போது டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.
    • ஓணம் பண்டிகையொட்டி பச்சை காய்கறிகள் விலை கூடுதலாக விற்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட் மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வருகிறது.

    இந்த மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், சுந்தரபாண்டியபுரம், சேர்ந்தமரம், குலையநேரி, சடையப்பபுரம், கட்டேறிபட்டி, குபேரபட்டணம், ராமச்சந்திரப்பட்டிணம், மேலமெஞ்ஞானபுரம், சுரண்டை,

    கீழக்கலங்கல், மேலக்கலங்கல், அச்சன்குன்றம், லட்சுமிபுரம், கருவந்தா, பரங்குன்றாபுரம், அதிசயபுரம், கலிங்கப்பட்டி, வீ.கே.புதூர், கல்லூத்து, இரட்டைகுளம், சாம்பவர்வடகரை, இலத்தூர், பெத்தநாடார்பட்டி, செல்லதாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம், ஆவுடையானூர், சாலைப்புதூர், அரியப்புரம், நாட்டார்ப்பட்டி, திப்பணம்பட்டி,

    கல்லூரணி, கொண்டலூர், திரவிய நகர், ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு விற்கப்படும் காய்கறிகள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் கேரள மாநில வியாபாரிகள் ஆண்டு முழுவதும் இந்த மார்க்கெட்டிற்கு நேரடியாக வந்து காய்கறிகளை கொள்முதல் செய்வது வழக்கம். ஓணம் பண்டிகையின்போது டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சூடுபிடித்துள்ளது. நாளை திருவோணம் நட்சத்திரத்தன்று ஓணம் திருவிழா விமர்சையாக நடக்கிறது. இதனையொட்டி பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த 3 நாட்களாக கூடுதல் காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இங்கிருந்து கர்நாடகா, மும்பையில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளும் அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    மேலும் சாம்பார் காய்கறிகளான கேரட், பீன்ஸ், வெள்ளரி, உருளை, பல்லாரி, சாம்பார் வெள்ளரி போன்றவை அதிகளவில் கொள்முல் செய்யப்பட்டு கேரள நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் இருந்து உருளை, இஞ்சி, பீன்ஸ் வரத்து குறைவாக இருந்தாலும் கேரளாவிற்கு தேவைக்கேற்ப அவற்றை வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகையொட்டி பச்சை காய்கறிகள் விலை கூடுதலாக விற்கப்பட்டன. கத்திரிக்காய் ரூ.10 முதல் ரூ.18-க்கும், வெண்டை கிலோ ஒன்றுக்கு ரூ.30, அவரை-ரூ.15, புடலைங்காய்-ரூ.35, சீனி அவரை-ரூ.33, காராமணி-ரூ.37, பாகற்காய்-ரூ.22, சுரைக்காய்-ரூ.20, பூசணிக்காய்-ரூ.8, தடியங்காய்-ரூ.6, சாம்பார் வெள்ளரி-ரூ.4, சுனாமி-ரூ.13, தக்காளி-ரூ.23, மிளகாய்-ரூ.30, சின்ன வெங்காயம்-ரூ.45, பல்லாரி கிலோ ரூ.20 முதல் ரூ.32 வரையிலும், மாங்காய் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும் விற்பனையானது.

    ×