search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "One person died"

    • சேர்வீடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது.
    • இந்த விபத்தில் ஒருவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது55).இவர் குடும்பத்தினருடன் தனது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டு மீண்டும் நத்தம் வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    காரை அவரது மகன் சிவனேசன் என்பவர் ஒட்டி வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு விலக்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதியது. இதில் காரில் வந்த கந்தசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் கந்தசாமியின் உடலை கைபற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் வந்த அவரது மனைவி கெஜலட்சுமி, மகன் சிவனேசன், மகள்கள் சுமதி, சித்ரா ஆகியோர் பலத்த காயங்களுடன் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி க்கபட்டுள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை தாலுகா ஆர்.வெள்ளோடு இடையபட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது44). இவருக்கு ரேணுகா என்ற மனைவியும் ஒரு மகன்,3 மகள்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் நாகராஜ் சாலையில் படுகாயங்களுடன் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா உத்தரவின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அங்கு சென்று பார்த்தபோது நாகராஜ் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணை நடத்தியதில் அடையாளம் தெரியாத வாகனம் நாகராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதும் இதில் அவர் சம்பவ இடத்திலேேய பலியானதும் தெரிய வந்தது.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே விபத்தில் ஒருவர் பலியானார்
    • மற்றவர்கள் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்

    தேனி:

    தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா (வயது 51). இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த அபினேஷ் (வயது 19). என்பவர் ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மற்றவர்கள் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×