search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one sided love"

    • இருவரில் ஒருவரின் காதலை ஏற்க வேண்டும்.
    • இல்லையென்றால் உனது படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    நல்கொண்டா:

    நல்கொண்டா மாவட்டம் குக்கடம் கிராமத்தில் இரண்டு வாலிபரின் ஒருதலை காதல் தொல்லையால் கல்யாணி (19) என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இளம்பெண்ணின் மரணத்திற்கு அதே ஊரைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபொயின மது ஆகிய இரு இளைஞர்கள் காரணமாக உள்ளனர். இருவரும் தொடர்ந்து இளம்பெண்ணை பின்தொடர்ந்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் இருவரில் ஒருவரின் காதலை ஏற்க வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளங்களில் உனது படங்களை மார்பிங் செய்து பதிவிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    இதனால் விரக்தியடைந்த அந்த இளம்பெண் பெற்றோர் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது அவரது சகோதரரும் கல்லூரிக்கு சென்றிருந்தார்.

    இதனால் சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மிரியாலகுடா மருத்துவமனைக்கும், பின்னர் நல்கொண்டாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து, சிறுமியின் சடலத்துடன் அத்தங்கி - நர்கெட்பள்ளி நெடுஞ்சாலையில் சிறுமியின் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). பட்டதாரி. இவர் ஒரு இளம் பெண்ணை கடந்த பல ஆண்டுகளாக ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் இவரது காதலை அந்த இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். காதலை இளம்பெண் ஏற்கவில்லை. இதனால் பிரபாகரன் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று பிரபாகரன், சேடப்பாளையம் பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரபாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    • பாரதி நாட்டு துப்பாக்கியுடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது.
    • கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தை அடுத்துள்ள கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது40). விவசாயி.இவரது மனைவி கலையம்மாள் (32). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாரதியை கோவிந்தன் வளர்ப்பு மகனாக வளர்ந்து வந்தார். கோவிந்தனுடன் சேர்ந்து பாரதி விவசாய பணிகளை கவனித்து வந்தார். மேலும் பாரதி நாட்டு துப்பாக்கியுடன் அடிக்கடி காப்புக் காட்டில் வேட்டைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒரு தலையைாக காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கோவிந்தனிடம் பாரதி கேட்டதாக தெரிகிறது. மேலும் இதில் கோவிந்தன் அவர் மகளை பாரதிக்கு பெண் தர மறுத்துள்ளார்.இதனால் கோவிந்தன் மீது பாரதி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கோவிந்தன் பால் கறந்து கொண்டிருந்த போது அங்கு நாட்டு துப்பாக்கியுடன் வந்த பாரதி, கோவிந்தனின் தலையில் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி கலைய ம்மாளையும் பாரதி நாட்டு துப்பாக்கியால் சுட்டார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த கணவன்-மனைவியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற கோவிந்தன் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். கலையம்மாள் முண்டியம் பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கண்டா ச்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் விழுப்புரம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில் தப்பி ஓடி அப்பகுதியில் உள்ள காப்பு காட்டில் பதுங்கி தலைமறைவாகி இருந்த பாரதியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    ஒருதலைக் காதல் கொலைகளை முற்றிலும் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ramadoss
    சென்னை :

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம்பெண், காதலிக்க மறுத்ததால் அதே துணிக்கடையில் முன்பு பணியாற்றிய ரவீந்திரன் என்பவரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஒரு தலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் இத்தகைய வெறிச்செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மெர்சியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 30-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஒருதலைக் காதல் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர். இத்தகைய படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிலையங்கள் என பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பஸ்களை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும், அதை காதில் வாங்க அ.தி.மு.க. அரசு மறுக்கிறது.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு பெண்கள் செல்லும் வழியில் கூடிநின்று, அருவருக்கத் தக்க வகையிலான செய்கைகளை செய்தல், பஸ்களில் தொல்லை கொடுத்தல் என்று பெண்களுக்கு எதிராக, பெண்களை மதிக்கத்தெரியாத கும்பல் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணிக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்லும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இது பெண்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் ஆபத்தாகும்.

    எனவே, ஒருதலைக் காதல் கொலைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் கடுமையாகச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதேபோன்று, பெண்களுக்கு எதிரான சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபடும் கும்பல்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss
    ×