என் மலர்
நீங்கள் தேடியது "Online"
- உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர்.
- மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.
சென்னை:
வங்கி கிளை தொடர்பு எண்கள், ஆன்லைன் பேங்கிங், கார்டு புகார்கள் குறித்த விவரங்களை அறிய வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் வங்கி வாயிலாக வழங்கப்பட்டு உள்ளன.
வங்கிகளுக்கு நேரில் செல்ல முடியாத பட்சத்தில் பலர் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை பதிவிட்டு வாடிக்கையாளர் சேவை மைய எண்களை பெறுவர். அதில் சில செல்போன் எண்கள் வரும். இவ்வாறு தேடப்படும் எண்கள் சமீப நாட்களாக மோசடி கும்பலால் மாற்றப்படுகிறது. உண்மை தன்மை தெரியாத பலர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொள்கின்றனர். மோசடி கும்பல் இவற்றை பயன்படுத்தி லிங்க் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைனில் வங்கி வாடிக்கையாளர் சேவை எண்ணை தேட வேண்டாம். எனவே வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்வது சரியானதாக இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
- அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
- அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் மறுவாழ்க்கைக்கு உதவுவதாக பல ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. இதனால் சிலருக்கு நன்மை நடந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கிறது.
அதே போல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டேட்டிங் செயலில் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த வாலிபர் காதலை தேடும் முயற்சியில் தனது வாழ்நாளுக்காக சேமித்து வைத்த பணத்தை இழந்தள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டேட்டிங் செயலில் சுயவிவரத்தை பதிவு செய்த நெய்டாவைச் சேர்ந்த தல்ஜித் சிங் என்பவருக்கு அனிதா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்த இவர்கள் நாளடைவில் இருவருக்கும் இடையேயான பேச்சும், நெருக்கமும் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் தல்ஜித் சிங்கின் நம்பிக்கையை பெற்ற அனிதா, பங்குச்சந்ததை மூலம் பெரும் லாபம் ஈட்டுவது குறித்து தகவல்களை பகிர்ந்து 3 நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலில் ரூ.3.2 லட்சம் முதலீடு செய்து சில மணி நேரங்களுக்குள் ரூ.24,000-ஐ சிங் சம்பாதித்தார். இதனால் அனிதா மீதான நம்பிக்கை சிங்கிற்கு வலுவடைந்து அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
இதனை தொடர்ந்து தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ.4.5 கோடியை முதலீட்டில் மாற்றினார். மேலும் அனிதாவின் ஆலோசனையின் பேரில், சிங் ரூ.2 கோடி கடனை எடுத்து அதையும் முதலீடு செய்தார். மொத்தம் ரூ.6.5 கோடியை 30 வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.
இதையடுத்து முதலீடு செய்யப்பட்ட தொகையில் 30 சதவீதத்தை திருப்பி தரும்படி அனிதாவிடம் சிங் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சிங்குடனான தொடர்பை அனிதா துண்டித்துள்ளார். மேலும் அனிதா தெரிவித்ததாகக் கூறப்படும் 3 நிறுவனங்களில் 2 துண்டிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சிங் இச்சம்பவம் தொடர்பாக நொய்டா செக்டர் 36-ல் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் பணம் மாற்றப்பட்ட கணக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம்.
- ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என தெரிவித்தார்.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அழைத்து இந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
- புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம்.
- மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
திருப்பூர் :
மின் கட்டண உயர்வு அமலான நிலையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன...வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை, ரொக்கமாக செலுத்த முடியாது.ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.
- ஆன்லைனில் ரூ.82 ஆயிரத்தை தொழிலாளி இழந்தார்
- ரூ.1600 ரூபாய் முதலீடு செய்ய கேட்டுள்ளார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் டிசிபிஎல் அபார்ட்மெண்டை சேர்ந்தவர் வசந்தவேல் (வயது 37). தொழிலாளியான இவருக்கு அமேசான் ஆன்லைன் இன்ஸ்வெண்ட்மெண்ட் என்ற பெயரில் வலைதள பதிவு ஒன்று வந்துள்ளது. அதனை அவர் திறந்து பார்த்துள்ளார். அப்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வாயிலாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் ரூ.1600 ரூபாய் முதலீடு செய்ய கேட்டுள்ளார்.
வசந்தவேலும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பவே திரும்ப 2200 ரூபாயாக அவருக்கு கிடைத்துள்ளது. இதில் உற்சாகம் அடைந்த அவரிடம் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் கேட்டுக்கொண்டது போல 82 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன.
புதுடெல்லி:
ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகிறது.
ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
- கலெக்டர் தெரிவித்தார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நிலையான வழி காட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணைய தளத்தில், தங்களது பெயர்களை பதிவு செய்து, பாஸ்போர்ட் புகைப்படம், 2 தவணை கொரோனா செலுத்தியதற்கான சான்று, வயது சான்று ஆகியவற் றை பதிவேற்றம் செய்ய வேண் டும். இதேபோல ஜல்லிக்கட் டில் பங்கேற்கும் மாடுகள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க் கப்பட்ட பிறகு, தகுதி யான நபர்களுக்கு இைணய தளத்தில் டோக்கன் பதிவேற்றப்படும். இந்த டோக்கனை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஒரு காளையுடன் அதன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று பெற்றிருக்க வேண்டும்.
மேலும் காளையுடன் அனுமதிக்கப்படுபவர்கள், மாடுபிடிவீரர்கள், பார்வை யாளர்கள் போட்டி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றை கொண்டு வர வேண்டும்.
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு விளை யாட்டுகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர் களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே பார்வையா ளர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.
திறந்தவெளி அரங்கின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியுடன் 150 பார்வை யாளர்கள் அல்லது அனுமதிக்கப் பட்ட இருக்கைகளில் 50 சதவீதத்திற்கும் மிகாத எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
- வருகிற 23-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
நாமக்கல்:
மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது. சாலையோரம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் நிறுத்தப்பட்டு இருக்கு வாகனங்களுக்கும், சாலைகளின் முறையாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கும் வாகன பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டு போலீசார் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர்.
அதில் என்ன குற்றம் என தெரிவிக்காமல் பொதுவான குற்றம் என கூறி அபராதம் விதிக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்க ளுக்கும் தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணிய
வில்லை உள்ளிட்ட முரணான காரணங்க ளுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் வாகனத்துக்கான காலாண்டு வரை தகுதி சான்றிதழ் உரிமை பெறும்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
எனவே ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி அனைத்து
மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், டி.ஜி.பி ஆகியோருக்கும் ஈமெயில் மூலம் மனு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023.
சேலம்:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் ெதாடங்குதல் , அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
2023-2024-ஆம் கல்வி யாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போது
மானது. விண்ணப்பிக்க வுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பித்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்ட
ணம் மற்றும் ஆய்வுக்கட்ட ணம் RTGS, NEFT மூலம்
செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவு களுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்ட ணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வு கட்டணமாக ரூ. 8 ஆயிரம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2023. இதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறி
வுரைகளை அறிந்துகொள்ள www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ricsalem7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 94990 55827 என்ற கைப்பேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.
பட்டீஸ்வரம்:
கும்பகோணம் பகுதியில் ஆன்லைன் வழியாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்க்கு வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட பகுதிகளில் ஆன்லைன் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து கைது செய்ய உத்தர விட்டார்.
இதன் அடிப்படையில் கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மேற்பா ர்வையில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில்,சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, பார்த்திபநாதன், செந்தில்குமார், ஜனார்த்தனன், பெண் காவலர் சுபேகா ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கும்பகோணம் பாணாதுறை தெற்கு வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஆன்லைன் மூலமாக விபச்சாரம் நடைபெற்று வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆன்லைன் மூலமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்த ஜான் சர்ச்சில் (எ)ராஜா (வயது 43) , பட்டிஸ்வரம் அடுத்துள்ள உடையாளூரை சேர்ந்த ரேவதி (எ) ரம்யா (35) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்க பட்டனர்.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் தஞ்சை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
- தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை சாலையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தினர்.
அதில் அவர் தஞ்சை வடக்கு அலங்கத்தை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பதும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
- ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தமிழக மக்களின் எதிர்ப்பு-போராட்டத்துக்கு கவர்னர் பணிந்துள்ளார்.
- பசும்பொன் பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் செயல் திட்டத்தை கவர்னர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு நிறைவேற்ற துடிப்பவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி. அவர் தமிழ்நாடு என் பதை மறுதலித்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் எனப் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி னார். பின்பு வலுவான கண்டனம் எழுந்த பின்னர் குடியரசு தின அழைப்பி தழில் தமிழ்நாடு என்று அச்சிட்டார்.
அதே போல அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த அறிக்கையில் சில வாக்கியங்களை தவிர்த்தும், திரித்தும் வாசித்தார். இதன்மூலம் அரசியலமைப்பு சட்டத்தையும், தார்மீக நெறிகளையும் மீறினார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பாதிக்கப்பட்ட 60பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
இதற்கு முடிவு கட்டும் வகையில் கடந்த ஆண்டு ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்பதலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரை நேரில் சந்திந்து மாநில அரசின் தரப்பில் தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இருந்தபோதிலும் 6மாத காலம் அந்த மசோதாவை கிடப்பில் போட்ட கவர்னர் இப்படி ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாட்டு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்ப்பட்ட மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டுள்ளார்.
இதற்கிடையே குடிமை தேர்வு எழுதும் மாணவர்களி டையே உரையாற்றிய கவர்னர் அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டாலே அதற்கு ஒப்புதல் இல்லை என்று தான் அர்த்தம் என்று பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் மசோதா வுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு கால நிர்ணயம் செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் காரணமாக வேறு வழியின்றி கவர்னர் ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.