search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ooty summer festival"

    ஊட்டியில் கோடை விழாவையொட்டி நடந்த ஓவிய கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில், கலாசார கலைநிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தினமும் மாலை நடைபெற்று வருகிறது.

    கோடை விழாவின் ஒரு பகுதியாக தனியார் கல்லூரி சார்பில், ஓவிய கண்காட்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. முன்னாள் தமிழக அரசின் முதன்மை செயலாளர் கண்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    கண்காட்சியில் நீலகிரியில் வாழும் கோத்தர் இன மக்களின் கைவினை பொருட்களான மண்பாண்டங்கள், நீலகிரி மாவட்டத்தின் பழமையான ஆதிவாசி மக்களின் புகைப்படங்கள், தஞ்சாவூரில் உள்ள சிற்ப ஓவியங்கள், வனவிலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை பல வண்ணங்களில் இடம் பெற்று இருந்தது. ரேக்ளா பந்தயம், சிறுத்தைப்புலி ஏரியில் தண்ணீர் குடிப்பது, குருவிகள் உணவுகளை கொத்துவது போன்றவை தத்ரூப ஓவியமாக தீட்டப்பட்டு இருந்தன.

    மேலும் பென்சில்களில் வரையப்பட்ட ஓவியங்களும் உள்ளது. இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி நிர்வாக இயக்குனர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓவிய கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். கண்காட்சியை காண நுழைவு கட்டணம் ஏதும் இல்லை. கண்காட்சி வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    ×