என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Open air sports hall"
- திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது.
- மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் மற்றும் திருப்பூர் வஞ்சிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலம் பணியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டு அரங்கில் தரை தளத்தில் உபகரண அங்காடி அறை, உடற்பயிற்சி அறை, பணியாளர்கள் அறை, விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் சுமார் 1050 நபர்கள் அமரும் வசதியுடன் பார்வையாளர்கள் அரங்கமும், மாற்றுத்திறனாளிகள் முதல் தளம் சென்று வருவதற்கு தனியாக சாய்தளம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 400 மீட்டர் அளவில் ஓடுதளமும், கால்பந்து மைதானமும் திறந்த வெளி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, திருப்பூர் - சோமனூர் செல்லும் சாலையில் இருந்து சிக்கண்ணா கல்லூரி செல்லும் சாலையில் திருப்பூர் - வஞ்சிபாளையம் ெரயில்வே நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின் போது, உதவிக்கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை (நெடுஞ்சாலை திட்டங்கள்) மல்லிகா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் சுரேஷ், ஈஸ்வரமூர்த்தி, பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துசரவணன், உதவி பொறியாளர் சத்தியராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்