search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opening of Vocational Training Centre"

    • திருச்சுழி அருகே புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கேத்தநாயக்கன்பட்டியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. இதில் கலெக்டர் மேகநாதரெட்டி கலந்து கொண்டுதொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் நான்கு தொழிற்பிரிவுகளில் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு ஆணையை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 4-வது அரசினர் தொழிற் பயிற்சி நிலையமாக திருச்சுழியில் 2022-23-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

    தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த 1½ ஆண்டு காலத்தில் இந்த பகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும் பெற்று தந்துள்ளார். இன்றைய கால கட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இந்த தொழிற் பயிற்சி நிலையத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.அரசினர் கலைக்கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை இந்த பகுதியில் ஏழை, எளிய மாணவர்கள் கல்வித்தரம் உயர உதவியாக இருக்கும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்்.

    இதில் நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வக்குமார், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணக்குமார், திருச்சுழி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாபா போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×