search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operator killed"

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது43). பம்ப் ஆபரேட்டர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை ராமச்சந்திரன் உளியநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். மீண்டும் மகேந்திரவாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கோடம்பாக்கம் - உளிய நல்லூர் கிராம சாலையில் செல்லும் போது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக ராமச்சந்திரன் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு அவர் பலத்த காயம டைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் பாணாவரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமச்சந்திரனை மீட்டு வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து டிரைவர் தேடி வருகின்றனர்.

    • 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காரப் பட்டு நிலானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் திருப்பதி (வயது 22) பொக்லைன் ஆபரேட்டர்.

    இவர் நேற்று திருப்பத்தூர் அருகே பூரிகமானிமிட்டா பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    அதேபோல் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26) அவரது நண்பர்கள் நரேஷ் (22), நாகராஜ் (22) ஆகிய 3 பேரும் ஒரு பைக்கில் திருப்பத்தூருக்கு சினிமா பார்க்க வந்து கொண்டிருந்தனர்.

    சி.கே. ஆசிரமம் பகுதியில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத் தில் திருப்பதி மற்றும் அருண்குமார் ஆகியோர் தூக்கி வீசப் பட்டு ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக் டர்கள் பரிசோதனை செய்து, வரும் வழியில் திருப்பதி இறந்து விட்டார் என்று கூறினர்.

    பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அருண்குமார் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரேஷ் மற்றும் நாகராஜ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×