search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Outgoing"

    • கல்குறிச்சி ஊராட்சி தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத் துக்கு உட்பட்ட கல்குறிச்சி ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவி யாஸ்மின் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவி பானுவனிதா உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பெரும் பாலான உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவி யாஸ்மின் உறுப்பி னர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை என்றும், குடிநீர் பிரச்சனையை சரிசெய்யவில்லை என்றும், கடந்த3 மாதங்களாக வார்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்றகூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட தீர்மானங்கள் மீது கையெழுத்து போடமல் அவர்கள் வெளியேறினர்.

    பின்னர் துணைத்தலைவி பானுவனிதா கூறியதாவது:-

    தலைவி யாஸ்மின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றும் வரை தொடர்ந்து கூட்ட த்தைப் புறக்கணிப்போம். இவரது நிதி முறைகேடு குறித்தும், அவரை பதவியிலிருந்து நீக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.ஏற்கெனவே நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களின் படி, எந்த ஒரு திட்டப் பணியும் நடைபெறவில்லை. அடிப்படை வசதி செய்யாததால் வார்டு மக்களிடம் எங்களால் பதில் கூற இயலவில்லை என்றார்.

    துணைத்தலைவி பானு வனிதா, உறுப்பினர்கள் சத்தி, வாணி முத்து, மலைச்சாமி, மகாலட்சுமி, பூமா, பாண்டியம்மாள் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    • தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் தி.மு.க கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
    • அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் ஆணையாளர் முஸ்தபா தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் தனது வார்டில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

    அதற்கு மறுப்பு தெரிவித்து ஆணையாளர் தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்களை வசித்த போது உறுப்பினர் வேதாச்சலம் வெளிநடப்பு செய்தார். அதனை தொடர்ந்து நகரமன்ற துணைத்தலைவர் தனம், திமுக உறுப்பினர் மைசூர், சுயேட்சை உறுப்பினர் முருகன், வி.சி.க. உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்கு பதில் அளித்து பேசிய தலைவர் குணசேகரன் இந்த நிதி ஆண்டில் அனைத்து வார்டுக்கும் தேவையான நிதியை பெற்று அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.

    ×