என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "outside the permitted"
- புறநகரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 3 பேர் என மாவட்டம் முழுவதும் 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
கோவை,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசு அளவுக்கு அதிகமாக வெடிப்பதனால் காற்றுமாசு ஏற்படுகிறது. இதனால் வயதானவர்கள் மற்றும் மூச்சு திணறல் பாதிப்பு உள்ளவர்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு வெடி க்கப்படும் பட்டாசுகளினால் காற்று மாசு ஏற்படாமல் தடுக்க குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது.மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மாநகரில் அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தவிர்த்து எங்காவது பட்டாசு வெடிக்கப்படு கிறதா? என போலீசார் தீவிரமாக ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக ஆர்.எஸ்.புரத்தில் 6 பேர் மீதும், வடவள்ளியில் 6 பேர் மீதும், சிங்காநல்லூரில் 7 பேர் மீதும், செல்வபுரத்தில் 5 பேர் மீதும், துடியலூர், உக்கடம், சாய்பாபா காலனியில் தலா 4 பேர் மீதும், குனியமுத்தூர், சுந்தராபுரம், பெரியக்கடை வீதியில் தலா 3 பேர் மீதும், வெரைட்டிஹால் ரோடு, ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், போத்தனூர், சரவணம்பட்டியில் தலா 2 பேர் மீது என மாநகரில் மொத்தம் 66 பேர் மீது 66 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. புறநகரில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 3 பேர் என மாவட்டம் முழுவதும் 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்