search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy Sacks"

    • நெல் மூட்டைகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார் நிலையில் போதிய எண்ணிக்கையில் உள்ளன.
    • நெல் மூட்டைகளை பாதுகாக்கவும், நெல்மூட்டைகளை அரவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தஞ்சாவூர் மண்டலம் நடப்பு கொள்முதல் பருவத்தில்

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    கும்பகோணம் தாலுகா கொத்தங்குடி திறந்தவெளி நெல் சேமிப்பு நிலையத்தில் 6933 டன் நெல் இருப்பு வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் 6933 மெட்ரிக் டன் மேலும் கருப்பு பாலித்தின் கவர் கொண்டு மூடி கயிறு கட்டப்பட்டுள்ளது.

    மழையினால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டது என்று தகவல்வ ரப்பெற்றதை தொடர்ந்து மேலாளர் (தரக்கட்டுப்பாடு) கொத்தங்குடி திறந்தவெளி சேமிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏற்கனவே அங்கு திறந்த வெளியிலிருந்த நெல் மூட்டைகள் சரியான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் முதல் நாள் பெய்த மழையில் ஏதும் நனையவில்லை என்றும் ஆனால் ஒரு அட்டி மட்டும் கீழே அட்டி அமைப்பதற்காக அமைக்கப்பட்ட வெட்டுக்கல் மண் அமைப்பினால் உள் வாங்கியதால் நெல் மூட்டைகள் சரிந்து விட்டன.

    அதை மீண்டும் மறு அட்டி அடுக்கும்போது சிலர் அதை புகைப்ப டமெடுத்து அது மழையில் நனைந்ததாக சுட்டிகாட்டி விட்டதாகவும் தெரியவந்தது.

    மழையி னால் எவ்வித பாதிப்பும், இழப்பும் இல்லை என்பதோடு சேமிப்பு மைய த்தில்64 அட்டிகளும் (6.933 மெ.டன்) பாதுகாத்து கருப்பு பாலித்தின் கவர் கொண்டு மூடி சுற்றிலும் கயிர் கட்டி பாதுகாக்க ப்பட்டு வருகிறது.

    இது குறித்து நான் (கலெக்டர்) இந்த சேமிப்பு மையத்தை ஆய்வு செய்தபோது மழையினால் எவ்வித நெல் மூட்டைகளும் நனையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    நெல் மூட்டைகள் அனை த்தையும் பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள் தயார் நிலையில் போதிய எண்ணிக்கையில் உள்ளன.

    திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் அனைத்தையும் ஆய்வு செய்து நெல் மூட்டைகளை பாதுகா க்கவும், நெல்மூட்டைகளை அரவைக்கு துரிதமாக அனுப்பவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க சம்பந்த ப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    அதே போன்று வருங்காலங்களில் நெல் மூட்டைகளை இது போன்று புகார் மற்றும் செய்தி வராமல் மழையிலிருந்து பாதுகாக்க மேற்கூரையிட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×