என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » palakkad accident
நீங்கள் தேடியது "Palakkad Accident"
- பாலக்காடு அருகே இரு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது.
- இதில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள வடக்கன்சேரியில் சுற்றுலா சென்ற பள்ளிப் பேருந்தும், எதிரே வந்த அரசு பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் 9 பேர் பலியாகினர் என்றும், மேலும் 40க்கும் மேற்பட்டோட் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியானது.
காயமடைந்தவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து விபத்தில் சிக்கியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்காடு அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தாய், மகள் பலியாயினர். சிறுமிகள் உள்பட 3 பேர படுகாயம் அடைந்துள்ளனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மனைவி பார்வதி (வயது 50). பார்வதியின் உறவினர் மன்னார்காட்டில் உள்ளனர். அவர்களது புதுமனை புகுவிழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
விழாவில் கலந்து கொள்ள பார்வதியின் மகள் சுஜிதா (30). மருமகன் சுதீஷ் (30). பேத்தி ஆரதியா மற்றும் உறவினர் ஆரியா (15) ஆகியோருடன் ஆட்டோவில் நேற்று புறப்பட்டார். ஆட்டோவை மருமகன் சதீஷ் ஓட்டினார்.
மன்னார்காட்டில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் மாலை வீட்டுக்கு புறப்பட்டனர். ஆட்டோ கரிம்பா அருகே வந்தபோது எதிரே பாலக்காட்டில் இருந்து மன்னார்காட்டுக்கு கேரள அரசு பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கூடுபோல் நொறுங்கியது.
ஆட்டோவில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்து அலறி சத்தம் போட்டனர். அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தாய் பார்வதி, மகள் சுஜிதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயத்துடன் முதலுதவி சிகிச்சை பெற்ற சுதீஷ், ஆரதியா, ஆரியா ஆகியோர் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

×

X