search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pandalam King"

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைந்தால் நடையை மூட வேண்டியிருக்கும் என பந்தள மன்னர் கூறியுள்ளார். #SabarimalaProtests #PandalamKing
    பத்தனம்திட்டா:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பைக் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் போராட்டம் வலுவடைந்தது.  தீர்ப்பை சுட்டிக்காட்டி சபரிமலைக்கு வந்த பெண்களை போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.



    இந்நிலையில் கோவிலுக்குள் எப்படியும் நுழைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் இன்று புறப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவிதா உள்ளிட்ட இரண்டு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் இன்று சன்னிதானத்தை நெருங்கினர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களை திருப்பி அனுப்பும்படி கேரள அரசு உத்தரவிட்டது. பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு தரலாம், ஆனால் பெண்ணியவாதிக்கு பாதுகாப்பு தர முடியாது என அரசு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே சபரிமலை சன்னிதானத்தில் பெண்கள் நுழைந்தால் நடை மூட வேண்டியிருக்கும் என பந்தள மன்னர் கூறியுள்ளார். பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தை மூடும்படி மேல்சாந்திக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaProtests #PandalamKing 
    ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு. சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர் என்று பந்தளம் மன்னர் தெரிவித்துள்ளார். #Sabarimala
    செங்கோட்டை:

    சபரிமலை சந்நிதிக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்து நல்ல தீர்ப்பு வழங்கும் வரை சபரிமலையில் நடக்கும் மகரஜோதி தரிசனத்திற்கான ஆபரண பெட்டியை அனுப்ப முடியாது என்று பந்தளம் மன்னர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஐயப்ப பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர்களுடன் கலந்து கொள்ளும் சரண கோ‌ஷ ஊர்வலம் திருச்செந்தூரில் இன்று (16-ந் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்மராஜா இன்று காலை செங்கோட்டை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்துவம் உண்டு. சபரிமலை கோவில் வழக்கின் பின்புலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளனர். நாளை பம்பையில் சபரிமலை மேல்சாந்தியை தேர்ந்தெடுக்க உள்ளோம். சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala



    ×