search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panguni Uthara Derottam"

    • கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினந்தோறும் யானை, குதிரை, மயில் ‌உள்ளிட்ட வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவம் ‌மற்றும் பூ பல்லக்கும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இத்திருவிழா கடந்த 29-ந் தேதி முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை தினந்தோறும் யானை, குதிரை, மயில் உள்ளிட்ட வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவம் மற்றும் பூ பல்லக்கும் நடைபெற்றது.

    நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, விஜயகிரி வடபழனி யாண்டவர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேரை நிலை சேர்த்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். இன்று சத்தாபரணமும், கொடி இறக்குதலும், நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

    ×