search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panruti accident"

    பண்ருட்டி அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரி சென்ற ஜீப் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    பண்ருட்டி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்துவதை தடுக்க பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலூர் மாவட்டத்திலும் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம்- காட்டுக்கூடலூர் பகுதியில் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் (வயது 43) தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் (56) மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் ஜீப்பில் ஏறி பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் காடாம்புலியூர் தாமரைகுளம் அருகே நள்ளிரவு 1.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த பறக்கும் படை அதிகாரி ஜீப் மீது மோதியது.

    இதில் ஜீப்பின் பின்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. அதில் பயணம் செய்த தாசில்தார் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல், ஏட்டுகள் சரவணன், ஆனந்தபாபு, போட்டோ கிராபர் சார்லஸ் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பண்ருட்டி அருகே கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பண்ருட்டி:

    கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு 11 மணி அளவில் லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.

    அந்த லாரி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு அந்த லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர், கிளினர் உள்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் விரைந்துசென்று போக்குவரத்தை சரி செய்தனர். பின்பு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த லாரி அகற்றப்பட்டது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று காலை கியாஸ் சிலிண்டர் லாரி மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 35). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு நிவாஷ் (3) என்ற ஆண் குழந்தையும், லத்திகா என்ற 1½ வயது பெண் குழந்தையும் உள்ளது.

    இன்று காலை நிவாஷ் தனது தங்கை லத்திகாவை தூக்கி கொண்டு தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றான். குழந்தைகள் அனைவரும் தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் பண்ருட்டியில் உள்ள கியாஸ் ஏஜென்சிக்கு சொந்தமான மினி லாரி ஒன்று சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்தது.

    அந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உடனே அந்த குழந்தைகள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

    இதில் 1½ வயது குழந்தையான லத்திகா மீது அந்த மினி லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லத்திகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    லத்திகாவின் உடலை பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை லத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×