என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Para Volleyball"
- 11-வது சினியர் சிட்டிங் பாரா வாலிபால் போட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கியின் கோப்பைகளை பரிசாக தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
வல்லம்:
அகில இந்திய அளவிலான 11-வது சிட்டிங் பாரா வாலிபால் போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கியது.இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது சினியர் சிட்டிங் பாரா வாலிபால் போட்டி, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, உத்ராகாண்ட், ஜார்கண்ட், ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு பாரா வாலி சங்கத்தின் மாநில தலைவர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்றார்.
இதில் பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணி முதலிடமும், கர்நாடக மாநில அணி இரண்டாமிடமும், தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணி மூன்றாமிடமும் பிடித்தது.அதே போல் ஆண்கள் பிரிவில் கர்நாடக அணி முதலிடத்தையும், தமிழ்நாடு அணி இரண்டாமிடத்தையும், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணி மூன்றாமிடத்தையும் பிடித்தது.
தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு அணிகளிலிருந்தும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்தியன் ஓவர்சீ்ஸ் வங்கியின் கோப்பைகளை பரிசாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பேசியதாவது,
மாற்று திறனாளிகளின் திறன் தெரிய வேண்டும் என்பதற்காக தான் இந்த போட்டி நடைபெற்றது என்றும் மேலும் அவர்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர பேசினார்.
இதில் தஞ்சை மாவட்ட தடகள சங்க தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வேலுச்சாமி, பதிவாளர் வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்