என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » parangimalai railway station
நீங்கள் தேடியது "Parangimalai railway station"
பரங்கிமலை ரெயில் நிலைய 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் உயரம், அகலம் குறைக்கப்படும் என்று ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் வெறினார். #StThomasMountStation
ஆலந்தூர்:
பரங்கிமலை ரெயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் இன்று வந்தார்.
சம்பவம் நடந்த 4-வது பிளாட்பாரத்தை ஆய்வு செய்தார். விபத்துக்கு காரணமாக கூறப்படும் பக்கவாட்டு சுவரை பார்த்தார். பின்னர் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ரெயில்வே நடைமேம்பாலத்தின் கீழே சென்று 40 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில்வே அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை.
பின்னர் பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் தங்கள் முதுகில் பைகளை தொங்க விட்டுக் கொண்டு வந்தது தான் விபத்திற்கான காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
பீக்அவர்சில் ரெயில்கள் அதிகளவு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் அதிகப்பட்சமாக 12 பெட்டிகளை கொண்டு ரெயிலை இயக்குவதற்குதான் அனுமதி உள்ளது.
கதவுகள் மூடப்பட்ட ரெயில் பெட்டிகளை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மும்பையில் தற்போது ஒரு சில ரெயில்கள் மூடப்பட்ட கதவுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
ரெயில் நிலையத்திற்கு மின்சார ரெயில் வந்த வேகம் சரியானதுதான். ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்று ரெயில் நிலையங்களிலும் பெட்டிகள் உள்ளேயும் ஒலிபெருக்கி, ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் மக்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் மிகக் குறைவு. ஆனால் அதனுடைய உயரம் மற்றும் அகலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது 4-வது பிளாட் பாரத்தில் சாதாரண மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிந்த பிறகு அறிவிக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.
மின்தடை காரணமாகத் தான் பிளாட்பாரத்தை மாற்றி நேற்று மின்சார ரெயில் இயக்கப்பட்டது. அதற்கு பயணிகள் காலதாமதத்தால் அவதிப்படக்கூடாது என்பதற்காக இயக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் தான் முழுமையான விவரங்கள் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
பரங்கிமலை ரெயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் இன்று வந்தார்.
சம்பவம் நடந்த 4-வது பிளாட்பாரத்தை ஆய்வு செய்தார். விபத்துக்கு காரணமாக கூறப்படும் பக்கவாட்டு சுவரை பார்த்தார். பின்னர் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ரெயில்வே நடைமேம்பாலத்தின் கீழே சென்று 40 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில்வே அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு அதிகாரிகளால் பதில் அளிக்க முடியவில்லை.
பின்னர் பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள டிவிசனல் கோட்ட அலுவலகத்தில் வருகிற 30-ந்தேதி பரங்கிமலை ரெயில் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை கூறலாம். பயணிகளின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். பயணிகள் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது.
பீக்அவர்சில் ரெயில்கள் அதிகளவு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் அதிகப்பட்சமாக 12 பெட்டிகளை கொண்டு ரெயிலை இயக்குவதற்குதான் அனுமதி உள்ளது.
கதவுகள் மூடப்பட்ட ரெயில் பெட்டிகளை இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் மும்பையில் தற்போது ஒரு சில ரெயில்கள் மூடப்பட்ட கதவுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
ரெயில் நிலையத்திற்கு மின்சார ரெயில் வந்த வேகம் சரியானதுதான். ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என்று ரெயில் நிலையங்களிலும் பெட்டிகள் உள்ளேயும் ஒலிபெருக்கி, ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவர் மக்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் மிகக் குறைவு. ஆனால் அதனுடைய உயரம் மற்றும் அகலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது 4-வது பிளாட் பாரத்தில் சாதாரண மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது இயக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிந்த பிறகு அறிவிக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.
மின்தடை காரணமாகத் தான் பிளாட்பாரத்தை மாற்றி நேற்று மின்சார ரெயில் இயக்கப்பட்டது. அதற்கு பயணிகள் காலதாமதத்தால் அவதிப்படக்கூடாது என்பதற்காக இயக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் தான் முழுமையான விவரங்கள் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் பலியான 4-வது பயணி யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
சென்னை:
சென்னையில் மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் ரெயில் நிலையத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
கடற்கரை நிலையத்தில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் பரங்கிமலை நிலையத்துக்குள் ரெயில் செல்லும் போது பக்கவாட்டு சுவரில் மோதி உடல் சிதறி உயிர் இழந்த சம்பவம் ரெயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நேற்று காலையில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் கல்லூரி மாணவர் சிவக்குமார் (23), பள்ளி மாணவர் பரத் (17) மற்றும் நவீன் குமார் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
அவர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
படிக்கட்டு விபத்தில் 4 பேர் இறந்ததில் அடையாளம் தெரியாத ஒருவர் யார் என்று தற்போது அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் வேல்முருகன் (25).
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரம் சித்தரசூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் ஆவார். அவர் பிளம்பராக வேலை செய்துள்ளார். அவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
சென்னையில் மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் ரெயில் நிலையத்தின் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
கடற்கரை நிலையத்தில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயிலில் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகள் பரங்கிமலை நிலையத்துக்குள் ரெயில் செல்லும் போது பக்கவாட்டு சுவரில் மோதி உடல் சிதறி உயிர் இழந்த சம்பவம் ரெயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நேற்று காலையில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தில் கல்லூரி மாணவர் சிவக்குமார் (23), பள்ளி மாணவர் பரத் (17) மற்றும் நவீன் குமார் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் ஒருவர் இறந்தார். அவர் பெயர் விவரம் தெரியாமல் இருந்தது. மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.
படிக்கட்டு விபத்தில் 4 பேர் இறந்ததில் அடையாளம் தெரியாத ஒருவர் யார் என்று தற்போது அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் வேல்முருகன் (25).
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரம் சித்தரசூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் ஆவார். அவர் பிளம்பராக வேலை செய்துள்ளார். அவர் சென்னையில் தங்கி வேலை செய்து வந்திருக்கலாம் என்று தெரிகிறது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
×

X