search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parasitic"

    • பரமத்தி வட்டாரத்தில் கரும்பு, வாழை பயிரை ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகு–வாக பாதித்துள்ளது.
    • இதனால் கரும்பின் உற்பத்தித் திறன் மற்றும் தரம் பாதிக்கப்படு–கின்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி கூறியதாவது:

    பரமத்தி வட்டாரத்தில் தற்சமயம் கரும்பு பயிரிடப்படும் பல இடங்களில் சுடுமல்லி எனும் ஸ்டிரைகா ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகுவாக பாதித்துள்ளது. இது கரும்பிலிருந்து ஊட்டச்சத்து மற்றும் நீரினை உறிஞ்சிக் கொள்கின்றது. இதனால் கரும்பின் உற்பத்தித் திறன் மற்றும் தரம் பாதிக்கப்படு–கின்றது . பயிறு வகைகளான பீன்ஸ்,சோயா மொச்சை, அவரை, நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் சுடுமல்லியின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது.

    சுடுமல்லி பூக்கும் பருவம் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதன் விதைகள் கீழே விழுந்து விடாதவாறு வயலிருந்து அகற்றி எரித்து விடவேண்டும். 2,4 டி மருந்து கிடைக்கும் பட்சத்தில் அதனை மூன்று அல்லது நான்கு முறை களை எடுப்பதற்கு பதிலாக பயன்படுத்தலாம். சுடுமல்லி ஒட்டுண்ணிக் களைகளைக் கட்டுப்படுத்த முதலில் அட்ரசின் அட்டாப் 1 கி.கி /ஹெக்டர் களைக்கொல்லியை களைகள் முளைக்கும் முன் மருந்து இட வேண்டும். கரணை விதைத்த 45 நாட்களுக்குப் பின் களைகள் நீக்கமும் 90 நாட்கள் கழித்து அணைப்பது அவசியம். மேலும் விபரங்களுக்கு கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×